லலித் அதுலத்முதலி கொலை, மீள விசாரணை நடத்த கோரிக்கை
-GTN-
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதியுமான அமரர் லலித் அதுலத் முதலியின் கொலை தொடர்பில் மீள விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லலித் அதுலத் முதலியின் சகோதரர் தயானந்த அதுலத்முதலி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
லலித் அதுலத்முதலி நினைவுப் பேருரையில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது சகோதரர் கொலை செய்யப்பட்ட இருபது ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், மர்மக் கொலைகளின் வரிசையிலேயே தமது சகோதரரின் கொலையும் பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்நெலிகொட கொலை செய்யப்பட்ட சம்பவங்களைப் போன்று தமது சகோதரரின் மரணமும் மர்மாகவே நீடிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரரினால் ஆரம்பிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தை பட்டப்பின் படிப்பினை தொடரும் மாணவர்களுக்கும் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமது சகோதரரின் இறுதிச் சடங்களில் கண்ணீர் புகைப் பிரயோகிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் , லலித் அதுலத் முதலிக்கு பிரஜா உரிமை வழங்கி அமைச்சுப் பதவி ஒன்றையும் வழங்க முனவந்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சிங்கப்பூர் பிரதமரின் இந்தக் கோரிக்கையை அதுலத்முதலி ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1987ம் ஆண்டு இராணுவத்தின் வடமராட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போது அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டமை சகோதரரை மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தது எனவும், பிரபாகரனை நெருங்கியிருந்த தருணத்தில் அப்போதைய அரசாங்கம் படையினரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய ஜனாதிபதியை நான்கு எழுத்து ஆங்கில கெட்ட வார்த்தையினால் சகோதரர் திட்டியதாகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்ற ரீதியில் அமைதியை பேணுமாறு தாம் சகோரரிடம் கோரியதாகவும் தயன்த அதுலத்முதலி தெரிவித்துள்ளார்.

Post a Comment