Header Ads



இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின், மஹிந்த சொன்னவை


எனது பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டு நான் தனி மனிதனாக இருந்தாலும் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது வரை காலமும் எனது பாதுகாப்புக்காக சேவையாற்றிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதோடு உங்கள் சேவையை நான் கௌரவப்படுத்துகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திரும்பப் பெறப்பட்டு பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. உண்மையில் இவருக்கு பலத்த பாது காப்பு கொடுக்க வேண்டும் என்பது மறுக்க முடியாது.ஆனால் இவர் முன்னாள் ஜனாதிபதிகள் போன்று அமைதியாக இருந்தால் பிரச்சினை இல்லை.அதை விடுத்து மீண்டும் பதவி ஆசை பிடுத்து அலையும் காரணமும் இருக்கும் அரசாங்கத்துக்கு பல சூட்ச்சிகளை செய்து வந்தால் எவ்வாறு இவருக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.முக்கியமாக இவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துகள் ஏதாவது ஒரு வகையில் ஏற்ப்ப்படுமானால் சிறுபான்மை மக்கள் பல துன்பங்களுக்கு சில காலம் ஆளாக வேண்டி வரும் காரணம் இவரோடு இருக்கும் இனத்துவேசிகள் எப்போது ஒரு சின்னப்பிரச்சினை வரும் அந்த சந்தர்ப்பத்தில் ஒரு கை பார்க்கலாம் என்ற இறுமாப்பில் இருக்கிறார்கள்.அவாறான ஒரு நிலை ஏற்பட்டால் இப்போதுள்ள இலங்கை நியைமையில் அரசாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகக்கடினமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.