Header Ads



சவூதி அரேபியாவின் இஸ்லாத்தை, இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது - ரொஹான் குண­ரத்ன


கலா­நிதி ரொஹான் குண­ரத்ன 
- தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் -

இலங்­கையைச் சேர்ந்த கலா­நிதி ரொஹான் குண­ரத்ன நன்யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ரா­கவும் அர­சியல் வன்­முறை மற்றும் பயங்­க­ர­வாதம் தொடர்­பான ஆய்­வுக்­கான சிங்­கப்பூர் சர்­வ­தேச மத்­திய நிலை­யத்தின் தலை­வ­ராகும் கட­மை­யாற்­று­கிறார். சிலோன் டுடே பத்­தி­ரி­கைக்கு அவர் அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ணலில் முக்­கிய பகு­தி­களை வாச­கர்­க­ளுக்கு தரு­கின்றோம்."

ஐ.எஸ் அமைப்பு தெற்­கா­சிய பிராந்­தி­யத்தை இலக்­காகக் கொண்டு உள்ளூர் ஜிஹாத் குழுக்­க­ளுடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்­தி வரு­கின்­றது. தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் ஐ.எஸ் அமைப்பின் பிர­சன்னம் பற்றி பகுப்­பாய்வு செய்­வது எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது?

பதில்: பயங்­க­ர­வா­தத்தின் கார­ண­மா­கவும் முன்­னோர்­களின் கடும்­போக்குக் கொள்­கைகள் கார­ண­மா­கவும் இலங்கை முப்­பது வரு­டங்­க­ளாக மிகப் பெரும் துன்­பத்தை அனு­ப­வித்­துள்­ளது. தமக்கு தனி­யான நாடொன்று வேண்­டு­மென்றும் சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுடன் இணைந்து வாழ முடி­யாது என்றும் மோச­மான எண்­ணங்­களை  அர­சி­யல்­வா­திகள் தமிழ் இளை­ஞர்கள் மனதில் விதைத்து விட்­டதன் விளைவே தமிழ் புலிப் பயங்­க­ர­வா­த­மாகும். 

இன்று ஐ.எஸ் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் பயங்­க­ர­வாதக் குழு இஸ்லாம் எங்கள் மத நம்­பிக்கை என்றும் ஏனைய மத நம்­பிக்கை கொண்­டோ­ருக்கு எதி­ரா­க நாம் சண்­டை­யிட வேண்டும் என்றும் நச்சு விதை­யினை இலங்கை உட்­பட உல­கெங்கும் உள்ள முஸ்லிம் இளை­ஞர்­களின் மனதில் விதைத்து வரு­கின்­றது. பௌதீக ரீதி­யா­கவும் இணை­யத்­தள ரீதி­யா­கவும் ஒரு­வகை சகிப்­புத்­தன்­மை­யற்ற நிலையும், கடும்­போக்கும் போதிக்­கப்­ப­டு­கின்­றன. 

இலங்கை உட்­பட தெற்­கா­சி­யாவின் மிகச் சொற்ப எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­களே ஐ.எஸ் இன் சிந்­த­னை­களில் நம்­பிக்கை வைத்து ஆத­ரிக்­கின்­றனர்.

தெற்­கா­சி­யாவில் ஐ.எஸ் அமைப்பு கொர்சான் இஸ்­லா­மிய தேசம் என்ற கட்­ட­மைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ளது. இது ஆப்­கா­னிஸ்தான் பாக்­கிஸ்தான் எல்­லையில் அமைந்­தி­ருப்­ப­தோடு தெற்­கா­சியா மற்றும் மத்­திய ஆசி­யாவில் தனது செல்­வாக்கை விரி­வு­ப­டுத்தி வரு­கின்­றது. இதில் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் சுமார் 40 இலங்­கை­யர்கள் ஐ.எஸ் அமைப்­புடன் இணை­வ­தற்­காக ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடு­க­ளுக்கு சென்­று­விட்­டனர். இவர்­களுள் சிலர் சண்­டையில் கொல்­லப்­பட்டு விட்­டனர்.

மிகவும் அமைதி பூர்­வ­மான பாரம்­ப­ரிய உள்ளூர் இஸ்­லா­மிய நெறி­யினுள் ஐ.எஸ் கடும்­போக்குச் சிந்­தனை வாதமும் வன்­மு­றையும் உள்­வாங்­கப்­ப­டு­மானால் நீண்ட காலத்தில் இலங்­கைக்கு அது அச்­சு­றுத்­த­லா­கவே அமையும்.

இலங்கை ஐ.எஸ் அமைப்­பி­னாலும் அத­னோடு இணைந்த துணைக் குழுக்­க­ளி­னாலும் உரு­வாக்­கப்­படும் கடும் போக்­கி­னையும் பயங்­க­ர­வா­தத்­தையும் எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்கும் 

சிரி­யாவில் 40 இலங்­கை­யர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்­டீர்கள். அவர்­களைப் பற்­றிய என்ன தகவல் உங்­க­ளிடம் இருக்கிறது? அவர்கள் பற்­றிய அடை­யா­ளங்கள் அர­சாங்­கத்­திற்குத் தெரி­யுமா?

பதில்: சிரி­யா­விற்கும் ஈராக்­கிற்கும் சென்­றி­ருக்கும் இலங்­கை­யர்­களில் பெரும்­பா­லானோர் இலங்­கைக்கு திரும்­பி­வ­ரவே நினைக்­கின்­றனர். சிரி­யா­விற்கும் ஈராக்­கிற்கும் செல்­வ­தற்கு இஸ்­லா­மிய தேச அமைப்­பினால் தாம் தவ­றாக வழி நடாத்­தப்­ப­ட்­டுள்ளோம் என அவர்கள் நம்­பு­கின்­றனர். வீட­மைத்துத் தரு­வ­தா­கவும், மாதாந்தம் சம்­பளம் வழங்­கு­வ­தா­கவும், அனைத்து வச­தி­க­ளுக்கும் மேல­தி­க­மாக அவர்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு உத­வு­வ­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.  நல்ல கல்வி, மகிழ்ச்­சி­யான வாழ்க்கை என்ற இனிப்­பான பிரச்­சா­ரத்­தைப்போல் அவர்­க­ளது அனு­பவம் இருக்­க­வில்லை. அவர்கள் உண்­மையில் அனு­ப­வித்­த­தெல்லாம் மின்­சாரத் தடை, உணவுத் தட்­டுப்­பாடு, தொட­ரான வன்­மு­றைகள் எதிர் வன்­மு­றைகள். போன்­ற­வை­யாகும்.

இலங்கைத் தலை­வர்­களைப் பொறுத்­த­வரை முக்­கி­ய­மா­ன­தொரு விடயம் என்­ன­வென்றால் முஸ்­லிம்­க­ளுக்கு மிகவும் துன்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற ஐ.எஸ் அமைப்பின் செயற்­பா­டு­கனை கண்­டிக்க வேண்டியதே. இலங்­கை­யி­லி­ருந்து சிரி­யா­விற்குச் சென்ற பெரும்­பா­லான இளை­ஞர்கள் நடுத்­தரக் குடும்­பங்­களைச் சேர்ந்­தவர். அது­மட்­டு­மல்­லாது ஒப்­பீட்டு ரீதியில் நன்கு படித்­த­வர்­க­ளா­கவும் இருந்­தனர். அவர்கள் அனை­வரும் ஐ.எஸ் அமைப்பின் சிந்­த­னை­களால் கவ­ரப்­பட்­டி­ருந்­தனர்.

இலங்­கையின் முஸ்லிம் தலை­வர்கள் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை என்­ன­வென்றால் ஐ.எஸ் என்­பதில் இஸ்­லாமும் இல்லை தேசமும் இல்லை என்­ப­தையும் முஸ்லிம் இளை­ஞர்கள் அவர்­க­ளது பொறியில் சிக்­கி­விடக் கூடாது என்­ப­த­னையும் தங்­க­ளது சமய நிறு­வ­னங்கள் மற்றும் ஊட­கங்கள் மூல­மாக வலி­யு­றுத்த வேண்டும். 

ஐ.எஸ் அமைப்­பி­லுள்ள இலங்­கையைச் சேர்ந்த எத்­தனை உறுப்­ பி­னர்கள் சிரி­யாவில் இது வரை கொல்­லப்­பட்­டுள்­ளார்கள் என்­பது தொடர்­பான விப­ரங்கள் எதுவும் தெரி­யுமா?

பதில்: இலங்­கை­யி­லி­ருந்து சென்­றோரில் மிகச் சொற்ப எண்­ணி­கை­யி­லா­னோரே கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். சிரியா மற்றும் ஈராக்கில் மீத­முள்ள இலங்­கை­யர்கள் எதிர்­வரும் மாதங்­களில் அல்­லது ஆண்­டு­களில் ஒன்றில் சிறைப் பிடிக்­கப்­ப­டு­வ­தற்கோ அல்­லது கொல்­லப்­ப­டு­வ­தற்கோ வாய்ப்­புள்­ளது. ஐ.எஸ் அமைப்பின் கோரத்­தினை உலகம் கண்­டு­கொண்­டது. தற்­போது பொது­வாக வின­வப்­ப­டு­கின்ற ஒரு கேள்­விதான் ஐ.எஸ் அமைப்பு கலைக்­கப்­ப­டுமா என்­பது. இதி­லுள்ள பிரச்­சினை என்­ன­வென்றால் உலகின் ஏனைய பிர­தே­சங்­களில் குறிப்­பாக ஆசியா, ஆபி­ரிக்கா, மத்­திய கிழக்கு மற்றும் மேற்கு நாடு­களில் அதன் கடும்­போக்குக் கொள்கை நன்கு வியா­பித்­து­விட்­டது. இதுவே இதி­லுள்ள மிகப் பெரும் சவா­லாகும்.  

ஐ.எஸ் அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் யுத்தம் எமது பிர­தே­சத்­தி­லி­ருந்து மிகத் தொலைவில் நடை­பெ­று­கின்­றது. சிரி­யாவில் யுத்தம் செய்­வ­தற்கு ஆசிய பிராந்­தி­யத்தில் தள­மொன்றை அமைப்­ப­தென்­பது தர்க்­க­ ரீ­தியில் பொருத்­த­மான ஒன்­றாக காணப்­ப­ட­வில்லை. அந்த வகையில் வெளி­நாட்டில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் யுத்­த­மொன்று தொடர்பில் நாம் கரி­சனை கொள்ள வேண்­டுமா? அந்த யுத்­தத்தின் கார­ண­மாக எமக்கு ஏற்­படும் பாதிப்பு என்ன?

பதில்: சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்­லிம்கள் அமை­தி­யினை விரும்­பு­ப­வர்கள். சிறிய எண்­ணிக்­கை­யி­லா­னோரே சிரி­யா­வுக்கும் ஈராக்­கிற்கும் சென்­றி­ருக்­கி­றார்கள். அவர்கள் நாடு திரும்­பினால் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­ட­வில்­லை­யானால் அவர்­க­ளது இஸ்­லா­மிய சட்டம் மற்றும் தலை துண்­டித்தல் உள்­ளிட்ட ஐ.எஸ் ஆட்­சி­மு­றை­யினைத் திணிக்க முற்­ப­டு­வார்கள். அது இலங்­கைக்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக அமையும். மேலும் சிரி­யா­வி­லி­ருந்தும் ஈராக்­கி­லி­ருந்தும் திரும்பி வரு­ப­வர்கள் ஏனை­யோ­ருக்கு தமது சிந்­த­னை­களை ஊட்ட முற்­ப­டு­வார்கள்.

இது தவிர அவர்கள் ஐ.எஸ் ஜாம்­ப­வான்­க­ளா­கவே இங்கு பார்க்­கப்­ப­டு­வார்கள். அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­ட­வில்­லை­யானால் வெளிப்­ப­டை­யா­கவே கொடூ­ர­மா­னதும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­ன­து­மான ஐ.எஸ் இன் சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்­து­வார்கள்  

சிரி­யா­வி­லி­ருந்து சிலர் இலங்­கை­வ­ர­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டீர்கள். இது தொடர்­பாக இலங்கை அர­சாங்கம் அறிந்து வைத்­துள்­ளதா?

பதில்:  வெளி­நா­டு­க­ளுக்கு பய­ணிப்போர் தொடர்­பிலும்  சிரியா மற்றும் ஈராக்கில் என்ன நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது .என்­பது தொடர்­பிலும் இலங்கை அர­சாங்கம் நன்கு அறிந்து வைத்­துள்­ளது. இலங்கைப் பாது­காப்பு மற்றும் புல­னாய்வுத் துறை ஆகி­யன அச்­சு­றுத்தல் தொடர்பில் மிகக் கவ­ன­மாக அவ­தா­னித்து வரு­கின்­றன. இது தவிர, பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்­சி அண்மைக்­கா­ல­மாக ஏற்­பட்­டு­வரும் மாற்­றங்கள் தொடர்­பான கரி­ச­னையில் உய­ர­ள­வி­லான முன்­னு­ரிமை வழங்­கி­யுள்ளார். தற்­போ­துள்ள முக்­கிய தேவை என்­ன­வென்றால், முஸ்லிம் அமைப்­புக்கள் தலை­மை­யேற்று பாது­காப்பு அமைச்­சு­டனும்,  நாட்டின் பாது­காப்­புக்கும் ஸ்திரத்­தன்­மைக்கும் பொறுப்­பா­க­வுள்ள அர­சாங்க முகவர் நிறு­வ­னங்­க­ளு­டனும் மிக நெருக்­க­மாகப் பணி­யாற்ற வேண்டும். 

தெற்­கா­சியப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து எத்­தனை பேர் ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து கொண்­டுள்­ளனர்?

பதில்:  ஐ.எஸ்.அமைப்பு பெரு­ம­ளவில் மத்­திய கிழக்­கினை தள­மாகக் கொண்­டது. உலக முஸ்­லிம்­களில் 63 வீத­மானோர் ஆசியக் கண்­டத்தில் வாழ்­கின்ற போதிலும் நான்­கா­யி­ரத்­திற்கும் குறை­வான ஆசிய நாட்­ட­வர்­களே ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து கொண்­டுள்­ளனர்.

தற்­போது ஒரு நிலை காணப்­ப­டு­கின்­றது, அதா­வது வச­தி­ப­டைத்த மற்றும் நடுத்­தர வர்க்க முஸ்லிம் இளை­ஞர்கள் இஸ்­லாத்தைப் பற்றி கற்­றுக்­கொள்­வதில் அதிக ஆர்வம் காட்­டு­கின்­றனர்.அவர்கள் ஷரீஆ சட்டம் மற்றும் ஏனைய இஸ்­லா­மிய துறை­களில் மலே­ஷியா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­களில் கற்­ப­தற்கு நிதி­யு­தவி அளிக்­கப்­ப­டு­கி­றது இதி­லி­ருந்து நீங்கள் எதனை உணர்­கி­றீர்கள் ?

பதில்: தற்­போது உலகம் முழு­வதும் கிறிஸ்­தவம், யூத மதம், பௌத்தம், சீக்­கிய மதம், இந்து மதம் மற்றும் முஸ்லிம் சமூ­கத்தில் கூட மத அடிப்­ப­டை­வா­தமும் கடும்­போக்கும் புத்­து­யிர்­பெற்று வரு­கின்­றது. அதனை தற்­போது கண்­கூ­டாகக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இலங்­கையில் மத அடிப்­ப­டை­வா­தத்­திற்கும், கடும்­போக்­கிற்கும் தடை விதிக்­கப்­பட வேண்டும்.

இலங்கை அர­சாங்கம் அதற்­கான தலை­மைத்­து­வத்தை வழங்க வேண்டும். இலங்­கையின் பண்­பாகக் காணப்­ப­டு­கின்ற பல்­லின மற்றும் பல மதங்­களைப் பின்­பற்­று­வோ­ரி­டையே ஆரோக்­கி­ய­மான நட்­பு­ற­வினைப் பேணு­வ­தற்­கான இலங்கை அர­சாங்­கத்தின் விருப்­பத்­திலும் ஆற்­ற­லி­லுமே பாது­காப்பும் ஸ்திரத் தன்மையும் தங்­கி­யுள்­ளது.  இலங்கை மாண­வர்கள் பிரச்­சினை நில­வு­கின்ற பகு­தி­க­ளுக்குச் சென்று தமது கல்வி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படக் கூடாது.

உதா­ர­ண­மாக யேமன், பாக்­கிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், சிரியா, லிபியா, மற்றும் ஈராக். இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­னணி முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற வேண்டும்.  அதே­போன்று சவூதி அரே­பியா மற்று ஏனைய நாடு­களில் கல்வி கற்ற பின்னர் நாடு திரும்­பு­கின்ற முஸ்லிம் பிள்­ளைகள் தங்­க­ளது சம­யத்­தி­லுள்ள கடும்­போக்கு விடை­யங்­களை பிரச்­சாரம் செய்­வதைத் தடுப்­பது இந்த முன்­னணி முஸ்லிம் நிறு­வ­னங்­களின் கட­மை­யாகும் ஏனென்றால் அது இலங்­கையில் பல்­லின மற்றும் பல மதங்­களைப் பின்­பற்­று­வோ­ரி­டையே காணப்­படும் சம­நிலைத் தன்­மைக்கு குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தும். 

சவூதி அரே­பி­யாவைப் பொறுத்­த­வரை, மாண­வர்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­லாமா அல்­லது அனுப்பி வைக்­கப்­படக் கூடாதா என்­பது பற்றி முஸ்லிம் தலை­வர்­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அர­சாங்கம் தீர்­மா­ன­மொன்றை எடுக்க வேண்டும். பல நாடுகள் தற்­போது சவூதி அரே­பி­யா­வுக்கு மாண­வர்­களை அனுப்பி வைக்­கப்­பது தொடர்பில் தயக்கம் காட்டி வரு­கின்­றன. ஏனெனில் சவூதி அரே­பி­யாவில் பின்­பற்­றப்­ப­டு­கின்ற கொள்கை, அரு­க­ருகே பிற இன மற்றும் மதத்தைச் சார்ந்தோர் வசிக்கும் நாடு­களில் பொருத்­த­மா­னதா என்ற கவ­லையே இதற்குக் கார­ண­மாகும்.  

இதில் முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால், இலங்கைத் தலை­வர்கள் வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பி­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு, பல தலை­மு­றை­க­ளாக இங்­கி­ருக்­கின்ற எமது பாரம்­ப­ரிய உள்ளூர் இஸ்­லாத்தைப் பின்­பற்ற வேண்டும் என்றும்,   சவூதி மற்றும் பாக்­கிஸ்தான் இஸ்­லாத்தைப்  இலங்கை மக்­க­ளுக்குத் திணிக்கக் கூடாது என்றும் ஆலோ­ச­னை­க­ளையும் புத்­தி­ம­தி­க­ளையும் வழங்க வேண்டும். 

பௌத்த துற­விகள் மதங்­க­ளி­டையே பதற்றத்தை ஏற்­ப­டுத்தி முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கே சென்று தாக்கும் அள­விற்குச் சென்­றதால் இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்கள் மத்­தியில் கோபம் காணப்­ப­டு­கின்­றது. அதே­வேளை பாரம்­ப­ரிய உள்ளூர் இஸ்­லாத்தை எவ்­வாறு பின்­பற்ற வேண்டும் என்றும் முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வூட்ட வேண்டும் என்று நீங்கள் குறிப்­பி­டு­கின்­றீர்கள். இதனை மறு­பு­ற­மாக 'பௌத்த துற­வி­க­ளுக்கும் அறி­வூட்­டுங்கள்' என்று அவர்கள் தரப்­பி­லி­ருந்தும் கேட்­ப­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­ற­தல்­லவா? தற்­போது முஸ்லிம்கள் கசப்­பு­ணர்­வுடன் சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து தனி­மைப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை நீங்கள் உண­ர­வில்­லையா?

பதில்:முன்­பி­ருந்த இலங்­கையின் அர­சாங்­கங்கள் பௌத்த, கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமயத் தலை­வர்கள் அர­சியலில் ஈடு­ப­டு­வதை தடுப்­ப­தற்குத் தவ­றி­விட்டன. அர­சியல் இலக்­கு­களை அடைந்­து­கொள்­வ­தற்கு சம­யங்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்ற சட்டம் இலங்­கைக்கு மிக அவ­சி­ய­மா­னது. அற்ப அர­சியல் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்­காக இன மத அடை­யா­ளங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை தடுப்­பது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.. அனைத்து மதங்­க­ளையும் கொண்ட கட்­சி­யாக அர­சாங்கம் அமைய வேண்டும். 
பொது­பல சேனா போன்ற கடும்­போக்கு குழுக்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக உணர்ச்­சியை கிள­றி­வி­டு­கின்ற வகை­யி­லான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றன. அத்­த­கைய கருத்­துக்கள் அவ்­வப்­போது பெளத்­தர்­க­ளுக்கும் பௌத்த மதத்­திற்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றன. எந்த ஒரு மதத் தலை­வரும் மற்­று­மொறு மத நம்­பிக்கை கொண்ட சமூ­கத்­தினைத் தாக்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படக் கூடாது. அவ்­வாறு நிக­ழு­மானால் அது இலங்­கையின் பொது­வான அடை­யா­ளத்தில் பாரிய சரிவை உண்­டாக்­கி­விடும். உண்­மையில் தனிப்­பட்ட கலாச்­சா­ரங்­களும், சம­யமும் பாது­காக்­கப்­பட வேண்டும். அவற்றை இல்­லாமல் செய்ய முயற்­சிக்கக் கூடாது. அவ்­வாறு நாம் செய்­வோ­மானால் எமக்கும் மத்­திய கிழக்­கி­லுள்ள ஏனைய நாடு­க­ளுக்கும் வித்­தி­யாசம் இல்­லாமல் போய்­விடும்.    

ஏற்­க­னவே இனங்கள் பிரிந்து போயுள்­ளன. மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­களும் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன. நாம் துரு­வப்­பட்டு விடாது எம்மை நாம் மீளொ­ழுங்கு செய்து கொள்­வ­தற்கு ஏதேனும் வாய்­ப்புள்­ளதா?

பதில்:தமது சொந்த இனம் மற்றும் மதம் என்­ப­ன­வற்­றிற்கு அப்பால் சிந்­திக்கக் கூடிய தூர­தி­ருஷ்­டி­மிக்க தலை­வர்கள் இலங்­கைக்குத் தேவை. இனத்தின் அடிப்­ப­டையில் அல்­லது மதத்தின் அடிப்­ப­டையில் மாநி­லங்­களை உரு­வாக்கும் இந்­திய முறை­மை­யி­லி­ருந்து நாம் விடு­பட வேண்டும். நாம் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கே நாம் உழைக்க வேண்டும். சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கடும்­போக்­கா­ளர்­க­ளுக்குப் பின்னால் அள்­ளுண்டு சென்­று­விடக் கூடாது. எமது இலங்­கையில் தேசி­யத்­தையே நாம் உயர்த்த வேண்டும் மாறாக இன­ரீ­தி­யான தேசி­யத்­தையோ அல்­லது மத ரீதி­யான தேசி­யத்­தையோ அல்ல. 

ஐ.எஸ் அமைப்­பிற்கு ஆட்­சேர்ப்­ப­தற்­கான முக்­கிய தள­மாக மாலை­தீவு காணப்­ப­டு­கின்­றது. அது எமது நெருங்­கிய அண்டை நாடா­கவும் காணப்­ப­டு­கின்­றது. இதனால் இலங்­கைக்கு உட­னடிப் பாதிப்­புகள் ஏதும் உள்­ளதா? ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பாது­காப்பு தளர்த்­தப்­பட்­டுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி குற்றம் சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் உங்­க­ளது கருத்த என்ன? 

பதில்: எமக்கு மிக நெருங்­கிய அண்டை நாடாக மாலை­தீவு காணப்­ப­டு­கின்­றது. அல்-­கைதா மற்றும் ஐ.எஸ் அமைப்பு இரண்­டி­னதும் பல­மான பிர­சன்னம் அங்கு காணப்­ப­டு­கின்­றது. நூற்­றுக்கும் மேற்­பட்ட மாலை­தீவு நாட்­ட­வர்கள் ஒன்றில் அல்-­கைதா உடனோ அல்­லது ஐ.எஸ் உடனோ இணைந்து சண்­டை­யி­டு­வ­தற்­காக ஆப்­கா­னிஸ்தான், பாக்­கிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடு­க­ளுக்குச் சென்­றுள்­ளனர். மிகக் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­க­கை­யி­லான மாலை­தீவு மக்கள் பயங்­க­ர­வா­தி­க­ளி­னாலும் கடும்­போக்­கு­வா­தி­க­ளாலும் பிரச்­சா­ரத்தின் மூலம் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளனர். இதன் கார­ண­மாக மாலை­தீவில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும், மேற்­கத்­தேய உல்­லாசப் பய­ணி­க­ளுக்கு எதி­ரா­கவும்  தாக்­கு­தல்கள் சில இடம்­பெற்­றுள்­ளன. அதே­போன்று, புத்தர் படங்கள் உள்­ளிட்ட இஸ்­லாத்­திற்கு முற்­பட்ட அருப்­பொ­ருட்கள் மாலை­தீ­வி­லுள்ள நூல­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­மான தாக்­கு­த­லொன்­றின்­போது அழிக்­கப்­பட்­டன. 

இந்தக் கடும்­போக்குக் கொள்கைப் பர­வலைத் தடுப்­ப­தற்கு மாலை­தீவு அர­சாங்கம் போதிய நட­வ­டிக்­கை­யினை எடுக்­க­வில்லை. அதற்குக் காரணம் அங்கு அர­சியல் ஸ்திரத்­தன்மை காணப்­ப­ட­வில்லை.  மாலை­தீவில் நடை­பெறும் விட­யங்கள் தொடர்பில் மிக அவ­தா­ன­மாக இருப்­ப­தோடு இலங்கை அதிகம் யோசிக்­காமல், ஐ.எஸ் சிந்­த­னையைப் பரப்­பு­கின்ற, அதற்கு ஆட்­சேர்ப்பில் ஈடு­ப­டு­கின்ற மற்றும் பிரச்­ச­னை­யான பிர­தே­சங்­க­ளுக்கு அனுப்பி வைக்க ஏற்­பாடு செய்­கின்ற குழுக்­க­ளையும் தனி நபர்­களை துல்­லி­ய­மாக அடை­யாளம் கண்­டு­கொள்­வ­தற்­கான திட்­ட­மொன்றை உரு­வாக்க வேண்டும். இது தவிர, இலங்கை சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான எதிர்­ப்பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரான சட்­ட­மொன்றை உரு­வாக்க வேண்டும். அதனை கட்­டா­ய­மாக பின்­பற்ற வேண்டும் என்­ப­தோடு  கட்­டுப்­பாடு, சகிப்­புத்­தன்மை மற்றும் சக­வாழ்­வு ஆகி­ய­வற்­றிற்­கான இறுக்­க­மான அறி­வு­றுத்­தல்­களை சமய கல்வி நிறு­வ­னங்கள், ஊட­கங்கள் அர­ச­ியல்­கட்­சி­க­ளுக்கு வழங்க வேண்டும். 

பாக்­கிஸ்தான், மரே­ஷியா மற்றும் பங்­க­ளாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகள் ஐ.எஸ் இன் பிர­சன்னம் தமது நாடு­களில் இருப்­பதை மறுத்­துள்­ளன. இந்த 'மறுப்பு' தொடர்பில் பேசப்­ப­டாத விடத்து அது பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்­துமா? 

பதில் : இலங்கை முஸ்­லிம்கள் ஒரு முன்­மா­தி­ரி­யான சமூ­க­மாகும். அவர்கள் வர­லாற்று ரீதி­யாக பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்­றி­யுள்­ள­தோடு சிங்­கள மற்றும் தமிழ் சமூ­கங்­க­ளுடன் மிக நெருக்­க­மான உற­வி­னையும் பேணி வந்­துள்­ளனர். துர­திஷ்­ட­வ­ச­மாக, அண்மை ஆண்­டு­களில் முஸ்லிம் தலை­வர்கள் தமது சமூகம் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது என்­பதை வெளிப்­ப­டை­யாக தெரி­விப்­ப­தற்கு வீரி­ய­மற்­ற­வர்­க­ளாகக் காணப்­பட்­டனர்.  ஆனால் தனிப்­பட்ட ரீதியில் என்­னி­டமும் அர­சாங்­கத்­தி­டமும் மத்­திய கிழக்கு கடும்­போக்கு சிந்­தனை குறிப்­பாக சவூ­தி­யி­லி­ருந்து வந்த சலா­பிஸம் மற்றும் வஹா­பிஸம் போன்­ற­வற்றால் இலங்­கை­யி­லி­ருந்த பாரம்­ப­ரிய அழ­கிய இஸ்லாம் பதி­லீடு செய்­யப்­பட்­டுள்­ள­த­காக தமது கருத்­துக்­களை பகிர்ந்­து­கொண்­டனர். 

இலங்­கையின் இஸ்­லா­மியப் பாரம்­ப­ரியம் பேணிப் பாது­காக்­கப்­பட வேண்டும் அத்­துடன் முஸ்­லிம்­களின் அடை­யா­ள­மாகக் காணப்­ப­டு­கின்ற கலாச்­சா­ரத்­தையும் செயற்­பா­டு­க­ளையும் பதி­லீ­டு­செய்­கின்ற மத்­திய கிழக்­கி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சிந்­த­னைகள் அனு­ம­திக்­கப்­படக் கூடாது என்­பது இதில் முக்­கி­ய­மான விடயம். இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாங்கள் சவூதி அரே­பி­யா­வா­கவோ, சிரியாவாகவோ, ஈராக் காகவோ அல்லது யெமனாகவோ மாறு வதற்கு விரும்பில்லை என்பதில் முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.  இலங்கை முஸ்­லிம்கள் நன்கு படித்­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். அது­மட்­டு­மல்­லாது தற்­போது முஸ்லிம் இளை­ஞர்கள் மீது செல்­வாக்குச் செலுத்­தி­வ­ரு­கின்ற அடிப்­ப­டை­வாத கடும்­போக்கு சித்­தாந்­தங்கள் பரப்­பப்­ப­டு­வ­தற்கு எதி­ராக உறு­தி­யான நிலைப்­பாட்­டினை அவர்கள் எடுத்தல் வேண்டும். மத்­திய கிழக்கு நாடு­க­ளினால் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­யுள்ள தமது பாரம்­ப­ரி­யங்கள் காப்­பாற்றிக் கொடுக்­கப்­ப­டு­மான எதிர்­கால முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்கு நன்றியுடையதாக இருக்கும். 

சமூக ஊட­கங்­களால் முஸ்லிம் இளை­ஞர்கள் கடும்­போக்­கா­ளர்­க­ளாக மாற்­றப்­ப­டு­வ­தாக நீங்கள் உணர்­கி­றீர்­களா அது தொடர்பில் நீங்கள் ஏதேனும் ஆய்­வினை மேற்கொண்டீர்களா? 

பதில் : உலகம் முழு­வ­தி­லு­முள்ள இளை­ஞர்கள் அடிப்­ப­டை­வாத மற்றும் கடும்­போக்கு சிந்­த­னை­களின் செல்­வாக்­கிற்கு உட்­பட்­டி­ருக்­கின்­றனர். ஐ.எஸ் அமைப்பு இணையத் தளங்­களை உச்ச அளவில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. ஐ.எஸ் அமைப்பு மிக நுட்­ப­மாக இளை­ஞர்­களை கவர்­கின்­றது. அர­சாங்­கங்­க­களின் வேகம் மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

-நன்றி விடி­வெள்ளி-

9 comments:

  1. Correct.srilanka.buddust.country

    ReplyDelete
  2. Mr Rohan Gunaratna do you know who is IS? Its not a Muslim group. What do you know about Islam? How dare you will say not to follow Saudi Islam in Sri lanka. Entire world is following one Islam religion only. Srilankans also following same Islam religion.

    ReplyDelete
  3. In fact we can realize a considerable change in Rohan’s approach in handling this session. Most of the time his findings are driven out of nothing with full of concoctions and imaginations. However, during this session he has pointed out some reasonable values which need to be appreciated. His view on traditional Muslim Identity of Sri Lanka of course requires further clarity, since Puppet Maulanas, Corrupted Muslim Politicians and Misguided Grave Worshippers are generally his knowledge sharing and gathering partners. It is obvious that due to narrow minded visions of certain uneducated and half-sensed Mullahs who magnify the provisional matters ahead of basic principles and concepts of Islam, there seems to be groups in making to promote extremism in thoughts and actions under the cover of Islam. However Gunaratne should thoroughly learn and understand the true and basic principles of Wahhabis and Salafism before expressing his views or throwing derogatory remarks with respect of the same which are indeed not the root causes of the so called extremism and or terrorism.

    ReplyDelete
  4. Sir: You were not answering the questions correctly, rather bluffing something else. You know that we know you are a liar. Can you keep your mouth shut please, Thks.

    ReplyDelete
  5. The truth is exaggerated here I suppose . Some Srilankan
    Muslims are caught between Iraq and Syria . They are
    struggling to get out of this situation and in the
    process , a couple of men could have fallen victims.
    Some media with vested interests are trying to
    magnify the situation to tarnish Muslim's image here
    and create tension among anti-Muslim elements .
    True , there are some reform seeking Islamic groups
    expanding their operations Island wide but that has
    nothing to do with creating tensions against any other
    faiths . It is all just about perfecting the way
    Srilankan Muslims follow their religion and nothing
    else . Srilankan Muslims are share holders in any
    government formed by any party . This is the best
    evidence for the trust they have placed in democracy.
    Everything else is rubbish !

    ReplyDelete
  6. I can't understand why the Singapore government is paying for this kind of people ( rohan guns ) this man is number one terrorism creator. for him survive he always must talk this kind of issues to keep him survive. my man shut your mouth

    ReplyDelete
  7. I can't understand why the Singapore government is paying for this kind of people ( rohan guns ) this man is number one terrorism creator. for him survive he always must talk this kind of issues to keep him survive. my man shut your mouth

    ReplyDelete
  8. இஸ்லாம் சவுதிக்கோ அல்லது அரபிகளுக்கோ சொந்தமானது இல்லை. இது அல்லாஹாவின் மார்க்கம். அதை அல்லாஹவே அவனுடைய வேதத்தில் தெளிவாக சொல்லி இருக்கான்.

    ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏
    "இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்"(குர்ஆன் 2:2)

    ReplyDelete

Powered by Blogger.