Header Ads



அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ஹிஸ்புல்லா வெளிநாடு சென்றார்

-Tw-

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ராஜினாமா..? தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில் அவர் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் இராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எதிர்வரும் ஜுன் மாதம் ஏழாம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர்களுக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாத பட்சத்தில் மேலும் பல இராஜாங்க அமைச்சர்களும் தங்கள் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் வகையில் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. வெளிநாடு சென்றுவிட்டார் ....

    அப்படியாயின் அவரை நம்பியிருந்த மக்களின் கதி..?

    ReplyDelete
  2. என்னது? அவரை மக்கள் நம்பியிருந்தார்களா??? அவ்வாறு நம்பியிருந்தார்கள் இவர் ஜெயித்துத்தானே தற்போதுள்ள பதவி கிடைத்திருக்க வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.