வெல்லம்பிட்டி தமிழ், முஸ்லிம்களின் அவசர கவனத்திற்கு..!
-Rishad Saheed-
சற்று முன்னர் DMMF இன் Post Disaster Relief தொடர்பான கூட்டம் இடம்பெற்றுல்லது.
இதில் தெரிவிக்கப்பட்டுல்ல ஒரு கவலைதரும் கருத்தை விரைவான செயற்பாட்டுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
இது வரை வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்களின் தரவுகளை அரசு சேகரித்துள்ளது.
இதன் படி 80% சிங்கள மக்களின் தரவுகளும் 20% தமிழ், முஸ்லிம்களின் தரவுகளும் பதிவாகியுள்ளன!
ஆனால் யதார்த்தம் என்னவென்றால் அந்த பிரதேசத்தில் 80 % தமிழ், முஸ்லிம்களும் 20% சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.
கிராம சேவகர் ஊடாக இந்த பதிவுகளை செய்வதற்கு இந்த இரு சமூகங்களும் தவறி இருக்கின்றன.
இனியாவது விரைந்து செயற்பட்டு இந்த பதிவுகளில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
அப்போதுதான் அரசாங்கத்தின் உதவிகள் (?) ஏதாவது எதிர்காலத்தில் கிட்டக்கூடும்.
Please share.

Post a Comment