ஈரான் நாட்டினர் ஹஜ் மேற்கொள்ள, எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை - சவூதி அரேபியா
ஈரான் நாட்டினர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி எந்த முட்டுக்கட்டையையும் ஏற்படுத்தவில்லை என்று சவூதி ஹஜ் விவகார அமைச்சகம் தெரிவித்தது.
சவூதி அரசு செய்தி நிறுவனம் வழியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஈரான் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாததற்கு அந்நாட்டு ஹஜ் குழுதான் பொறுப்பேற்க வேண்டும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளாமல் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. சன்னி பிரிவு நாடான சவூதிக்கும், ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே சுமுகமான உறவு இருந்ததில்லை.

Post a Comment