மைத்திரி ஒரு செல்லாக்காசு - புகுந்து விளையாடும் மஹிந்த
குருணாகல் மாவட்டத்தின் ஹிரியால தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று -07- கூடிய கட்சியின் தொகுதி அதிகார சபை மீண்டும் அந்த பதவியை வழங்கியுள்ளது.
இப்பாகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஹிரியால தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, சாலிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாலிந்த திஸாநாயக்க கடந்த மாதம் 28 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹிரியால தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், கமல் இந்திகவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொகுதி அமைப்பாளராக நியமித்தார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூடிய ஹிரியால தொகுதி அதிகார சபையினர் சாலிந்த திஸாநாயக்க மீண்டும் தொகுதி அமைப்பாளராக நியமிக்கும் யோசனையை நிறைவேற்றியுள்ளனர்.

Jaffna muslim and all media please stop calling this big thief as Ex President , still if you want to give him respect just call him as a MP
ReplyDeleteWhether we like it or not, he is an Ex. President. He may have been corrupted as any other Sri Lankan politician, but he is the one who wiped out LTTE, which Ranil and Chandrika failed to do when they were in power.
ReplyDeleteAbsolutely correct Jong Ayya
ReplyDelete