நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்
-மு.இ.உமர் அலி-
நிந்தவூரினைச்சேர்ந்த பலவிவசாயிகளுக்கு பொத்துவில் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிரான்-கோமாரி எனும் இடத்தில் நெற்காணிகள் உள்ளன.1957 ஆம் ஆண்டில் இருந்து அங்கு காடுவெட்டி களனி கண்டு நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த இவ்விவசாயிகள் பயங்கரவாத காலத்தில் இப்பகுதியில் வேளாண்மை செய்வதையும் மாடு தற்காலிகமாக வளர்ப்பதையும் கைவிட்டிருந்தனர்.
நாடு நல்லநிலைக்கு மாறியபின்னர் இவர்கள் தமது காணிகளுக்குள் சென்று பற்றைகளை வெட்டி ,சுத்தப்படுத்தி மீண்டும் நேநெற்செய்கையிலீடுபட்டு வருகின்றனர்.வனபரிபாலன திணைக்களமும்,பிரதேச செயலகமும் இவர்களது காணியின் உரிமைக்கு பலவழிகளில் அச்சுறுத்தலாகவும், சவாலாகவுமிருக்கின்றன.
இது பற்றி பிரதேச அரசியல்வாதிகளின் கால்களில் விழாத குறை மட்டுமே,எத்தனையோ கந்தோர்கள் ஏறி இறங்கியும் பயனில்லை.நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேச சபையில் நடைபெற்ற ஒரு விசேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் பல வாக்குறுதிகளை வழங்கிச்சென்றார்.அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளில் எதுவுமே இதுவரை நடைபெறவில்லை என விஷமம் தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.
இதனை கண்டிப்பதற்காகவும் அதிகாரிகளது அசமந்தப்போக்கினை இல்லாமல் செய்வதற்காக்கவும் இன்று (24.05.2016செவ்வாய்க்கிழமை) காலை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்னாள் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட கிரான் கோமாரியில் காணியுள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து பதாகைகளை சுமந்தவண்ணம் பாய்களை விரித்து அமைதியான முறையில் போராட்டமொன்றினை நடாத்தினார்கள்.
அத்துடன் இது விடையமாக கவனஈர்ப்பாளர்களினால் மகஜர் ஒன்று நிந்தவூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது மாவட்டச்செயலாளருக்கு அம்மகஜரினை பரிந்துரையுடன் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
பிரதி சுகாதார போசாக்கு அமைச்சர் பைசால்காசீம் அவர்களுக்கும் ஒரு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டார்கள்.

Post a Comment