நாங்கள் சீதனமாக, எதுவுமே வாங்கமாட்டோம் - காத்தான்குடி முஸ்லிம் இளைஞர்கள் வாக்குறுதி
-Muhammed Niyas-
தேசிய தௌஹீத் ஜமாஅத்தினால் நேற்றைய -06- தினம் நடாத்தப்பட்ட சீதன ஒழிப்பு மாநாட்டைப்போன்றே கடந்த 22:08:2008ம் ஆண்டும் தாருல் அதர் அமைப்பில் மௌலவி ஸஹ்றான் பிரச்சாரகராக பணியாற்றியபோது மிகப்பெரும் சீதன ஒழிப்பு மாநாடொன்று காத்தான்குடியில் நடாத்தப்பட்டது.
அந்த மாநாட்டிலும் அதிகமான இளைஞர்கள் பகிரங்கமேடையில் தாங்களாகவே முன்வந்து "எமது திருமணத்தின்போது சீதனமாக வீடு, காணி, பணம், நகை, வாகனம்,...என எதுவுமே வாங்கமாட்டோம்" என ஊர்மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கினார்கள்.
ஆனால் காலப்போக்கில் அவ்வாறு வாக்குறுதி வழங்கிய சிலரைத்தவிர ஏனையோர்கள் திருமணம் முடித்தபோது தாய், தந்தையர்களுடைய வறட்டு கௌரவத்திற்கு அடிமைப்பட்டு, வாக்குறுதியை புறந்தள்ளி, கொள்கையுறுதியை களைந்தெறிந்துவிட்டு மாமியார்மார்களுடைய வீடுகளில் இன்றுவரைக்கும் மானங்கெட்ட வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த இழிநிலைக்கு அவர்கள் அங்கத்துவம் பெற்றிருந்த தாருல் அதர் அமைப்பினுடைய பிரச்சார வீரியத்தில் ஏற்பட்ட தளர்வுநிலையும் நிருவாகிகளே சீதன வீடுகளை திருப்பிக்கொடுக்காமல் நொண்டிச்சாக்கு கூறிக்கொண்டு தஃவா(?)ப்பணி செய்துவந்த அசிங்கமும் ஒரு காரணியாகும்.
அந்த வகையில் தற்போது தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பகிரங்க மேடையில் ஏறிநின்று முழு உலகமும் அறியும் வண்ணமாக வாக்குறுதி வழங்கிய இந்த இளைஞர்களாவது கடைசிவரை தங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும்.
அதேநேரம் இவர்களுடைய வாக்குறுதிகளை செயற்படுத்துகின்ற விடயத்தில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தும் மிகவும் பக்கபலமாக இருப்பதுடன் அவ்வப்போது அவர்களுக்கான வழிகாட்டல்களை, உணர்வூட்டல்களை வழங்குவதில் சளைக்காமல் செற்படவேண்டும் என்பதையும் ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

Good job but not enough .Running after wealthy families
ReplyDeletealso must stop . You can say "I don't want dowry" but
choose a wealthy girl instead . Muslims are so clever to
exploit loopholes in Islam , like in the case of "nandu
haram shozi halal." And there should be a guarantee that
these works have a lasting effect and being supervised
for its consistency. And also , nothing should be forced.
For a marriage , what is needed is, a sane man and a sane
woman of qualified age and the ability to maintain a
marriage by the groom . There are other few conditions
but these are the basics . In short , anything that
makes the marriage a business deal must stop. Not easy
but it has to start from somewhere someday . If SLTJ
has started it , it is a good job . I'm normally not
happy about them but what's good is good whoever does
it !