Header Ads



நசீர் அஹ்மட், மன்னிப்பு கேட்க வேண்டுமா..?


-நஜீப் பின் கபூர்-

தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றார் கிழக்கு முதல்வர் ஹபிஸ் நசீர். இவர் அஷ்ரஃபுடன் இருந்து அவர் மரணத்தின் பின்னர் மு.கா. தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டு தனிக் கட்சி துவங்கி நடத்தியவர். ஒரு சிற்றரசுக்குள் பல இளவரசர்களை அதிகாரத்தில் நிறுத்தி அவர்களுக்கிடையிலான முரண்பாட்டில் தனது தலைமையைப் பாதுகாத்துக் கொள்ளும் ஹக்கீமின் இராஜதந்திரப்படி மீண்டும் மு.கா.வுக்குள் உள்வாங்கப்பட்டு இன்று கிழக்கு முதல்வராக வந்து  இருக்கின்றார் இந்த ஹபிஸ் நசீர்.

என்றாவது ஒருநாள் இந்தக் கட்சியின் ஆதிக்கத்தை கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கின்ற இவர், இன்று மூக்குடைபட்டிருப்பது தலைமைக்கு உள்ளுர மகிழ்ச்சியான செய்தியாக இருக்கக் கூடும்.!

பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரியைத் திட்டி அச்சுறுத்தியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்ததில் எமக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றது. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

கிண்ணியாவில் ஒரு வைபவம் முடிவடைந்தவுடன் சாம்பூர் மகா வித்தியாலத்தில் ஒரு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வைபவத்திற்கு போவதற்கு ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் அவரது அதிகாரிகளும் ஹெலியில் ஏற முற்பட்ட போது அதில் ஏறிக் கொள்ள கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் முயன்றிருக்கின்றார். குறிப்பிட்ட ஆசனங்களும் சட்டவரம்புகளும் காரணமாக அவரிடத்தில் தரைவழியாக வைபவத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனால் முதல்வருக்கு அந்த இடத்தில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது.

இதன் பின்னணியில்தான் சாம்பூர் வைபவத்தில் முதல்வர் அட்டகாசமாக நடந்து கலாட்டா பண்ணி இருக்கின்றார். தன்னை ஆளுனர் மதிப்பதில்லை என்பது கிழக்கு முதல்வர் வாதம். இது பற்றி ஆளுனர்தரப்பில் விசாரித்தால் தனது மனைவி மற்றும் அதிகாரிகளைக்கூட தான் தரைவாழியாக வைபவத்திற்கு வருமாறு இடப்பிரச்சினை காரணமாக சொல்லி இருக்கின்றேன். அப்படி இருக்கும் போது முதல்வர் நசீர் ஆளுனர் நடவடிக்கைகளினால்தான்; ஆத்திரப்பட்டு விட்டதாக இப்போது கதை விடுகின்றார்.

அப்படியானால் கிழக்கு முதல்வர் அப்பாவியான கடற்படை அதிகாரியை அச்சுறுத்தியது எந்த நியதிப்படி என்று கேட்கத் தோன்றுகின்றது. முதல்வருக்கும் ஆளுனருக்கும் லடாய் என்றால் அவருடன்தானே முதல்வர் முறுகி இருக்க வேண்டும். இந்த கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் முதல்வரின் ஏறாவூர் வீட்டிற்குள் புகுந்து அங்குள்ள பௌத்த பிக்குகள் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வரை எச்சரித்து அச்சுறுத்திக் கொண்டிருந்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. கிழக்கு முதல்வரின் இந்த நிலைப்பாடு தொடர்பாக மு.கா தலைமை இதுவரை வாய்திறக்காமல் இருக்கின்றது. இது ஏன் என்று புரியவில்லை.

சம்பவம் தொடர்பாக முதல்வர் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என்று பலவேறு தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இது நியாயமான கோரிக்கை என்று தான் நாமும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

2 comments:

  1. வெறுமனே ஹெலிகொப்டரில் இடம் மறுக்கப்பட்ட பிரச்சினையாக மட்டும் இதனைச் சித்தரிப்பதிலிருந்தே கட்டுரையாளரின் முதலமைச்சருடனான தனிப்பட்ட காழ்ப்பு வெட்ட வெளிச்சமாகின்றது. அவ்வாறு அதுவே உண்மையானாலும் சம்பூர் பாடசாலையில் நெறிமுறை பின்பற்றாமை பற்றி ஏன் கட்டுரையாசிரியர் குறிப்பிடவில்லை..?

    பாவம், நடுநிலையாக இருப்பது நடைமுறைக்குச் சிரமமாயினும் எழுதும் ஆக்கத்தில் அவ்வாறு இருப்பதுபோல காண்பித்துக்கொள்ளவாவது ஓர் ஊடகவியலாளருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பாவம் இந்த ஊடகவியலார்கள் .பேனையை கையில் பிடித்து விட்டால் எதனையும் எழுதி சமூகத்திற்கு திணித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.