சாதிக் கானுக்கு ஓட்டளித்தால் குண்டுவெடிக்கும் என்ற, வெறுப்பு பிரசாரத்தை தோற்கடித்த லண்டன் மக்கள்
![]() |
| Upbringing: The son of a bus driver Amanullah (far left) is proud of his life in South London (pictured in his mother's arms) and is now the first Muslim Mayor of London |
கொடீஸ்வரரான ஜேக் கோல்ட் ஸ்மித்தை எதிர்த்து சாதிக் கான் மேயர் தேர்தலுக்கு நின்றார். ஜேக் கோல்ட் ஸ்மித் மிகக் கீழ்தரமான பிரசாரத்தை மேற்கொண்டார். சாதிக் கானுக்கு ஓட்டளித்தால் லண்டனில் குண்டு வெடிக்கும் என்றெல்லாம் சொல்லி வெறுப்பு பிரசாரத்தை கையிலெடுத்தார்.
ஆனால் லண்டன் மக்கள் ஜேக் கோல்ட் ஸ்மித்தின் வெறுப்புப் பிரசாரத்தை புறந்தள்ளி சாதிக் கானை வெற்றி பெற வைத்துள்ளனர்.
லண்டனின் புதிய இஸ்லாமிய மேயரை நாமும் வாழ்த்துவோம்.
பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிய குடும்பத்தில், 1970ஆம் ஆண்டு பிறந்தவர் சாதிக் கான்.
கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சாதிக் கான் அமைச்சர் பதவி வகித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முஸ்லிம் ஒருவர் மேயராக தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல் முறையாகும்

"இஸ்லாமிய மேயரை வாழ்த்துவோம் "
ReplyDeleteமுதலில் இஸ்லாத்தை இழுக்குறத விட்டு விடுவோம் . எங்கட மீடியாக்கள் முஸ்லிம் ஒருத்தன் சாதிச்சா பெருசா பீத்திக்கொள்வாங்க ஆனா அதே வேறு ஒருத்தன் மதத்த முன்னால போட்டா அது துவேசம் என்போம் .
லண்டன்ல வெள்ளைக்காரன் கூட வோட் போட்டிருக்கான் முஸ்லிம் எண்டோ இஸ்லாம் எண்டோ பார்க்காம மனுசன் என்ற பாணியில, ஆனா நாங்க முஸ்லிம் இஸ்லாம் என்று குறுகிய சிந்தனையிலே இருக்கிறோம்
உதாரணமா " லண்டனில் பௌத்த மேயர் வாழ்த்துவோம்" என்றல் அடுத்த நிமிசமே இது மத துவேசம் என்று நாங்களே எதிர்போம், இப்படி சொல்லி நாங்க திருப்ப் திருப்பி இந்த தவர விடுறோம்.
Well said. ..100% true
ReplyDelete