காசா பகுதியில் ராக்கெட்களை ஏவி, இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் பகுதிக்குள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலுக்கு காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள காசா ஸ்டிரிப் பகுதியில் ராக்கெட்களை ஏவி இஸ்ரேல் இன்று -07- தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேல் ராணுவத்தினரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் எல்லையில் கொல்லப்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் பகுதிக்குள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஹமாஸ் போராளிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் காசா பகுதியின்மீது இன்று இஸ்ரேல் ராணுவம் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் தரப்பில் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அகன்ற ஷியா ,அகன்ற சியோனிஸ்ட் தேசங்களை நிறுவ ஹமாஸ் ஒரு பாலமாக செயட்பட்டுவருகின்ற்றது.ஒவ்வொரு ரமலான் மாதத்திற்கு முன்னரும் இவ்வாறு ஹமாஸ் தாக்குதல்களை கண்மூடித்தாக்கும் பின்னர் ரமலான் முழுவதும் இரத்தக்காட்டேரிகள் பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதுடன் அவர்களின் நிலபுலன்களும் பறிகொடுக்கப்படும்.முழுக்க முழுக்க ஷீஆக்களின் நிதியளிப்பின் பின்னணியில் செயற்படும் ஹமாஸ் தனது முகத்திரை ஒருநாள் கிழித்து வீசப்படும்.இது எனது தனிப்பட்ட கருத்து.அதுவரை புனித ரமளானில் இரத்தத்தால் பாலஸ்தீனியர்களை ஹமாசும் ஷியாக்களும் ஷியோநிஷ்டுகளும் CIA யும் குளிப்பாட்டுவது நிற்காது.
ReplyDelete