இலங்கை முஸ்லிம் சமூகம்போல, அன்புகாட்ட யாருமில்லை (ஆனால் இரண்டே, இரண்டு கவலை)
-Mohideen Ahamed Lebbe-
இலங்கை முஸ்லிம் சமூகம் போல அன்புகாட்ட யாருமில்லை....
ஆனால் இரண்டு விடயம் மட்டும் கவலை தருகிறது........
இந்த சமூகத்தைப் பாருங்கள்..... ஆச்சரியமான மனிதர்கள் இவர்கள்.....
எப்போது, எங்கு, யாருக்கு என்ன அனர்த்தம் நடந்தாலும் அங்கு முதலில் உணவுடனும், உடையுடனும், மருந்துடனும் பாதிக்கப்பட்டவர்களை அரவனைக்க முன்வரிசையில் எல்லோரையும் முந்தி சென்று நிற்பவர்கள் முஸ்லிம்கள் தான்.
இரக்கமும்,அன்பும், கருணையும், மனிதாபிமானமும், கொடைப்பண்பும், தியாகமும், அர்ப்பனமும் இவர்களது இரத்தத்தில் களந்த பரம்பரைக் குணங்கள் அல்லவா!!!!
அயல் வீட்டவரையும் முந்திச் சென்று உதவி நீட்டும் அதிசய குணம் எம் சமூகத்துக்கு உண்டு.....
அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள் எம் சமூகத்தின் பணக்கார்கள் மட்டுமல்ல ஏழைகளும் தான்....
எம் சமூகத்தின் பிஞ்சுகளுக்குள்ள உணர்வைப் பாருங்கள்.... அவர்களது பணியின் வேகத்தைப் பாருங்கள்.... அல்லாஹ் அருள் புரிவானாக.....
ஒன்றல்ல இந்த சமூகத்தின் பல நூறு அமைப்புகளும், தனிநபர்களும், கிராமங்களும் சேர்ந்து வாரி வாரி கொடுக்கிறார்கள்.....
அற்புதமானவர்கள் இவர்கள்.....
தன்னைத்தானே தியாகம் செய்து களத்தில் குதித்து மற்றவர் உயிரை, உடைமையைக் காப்பாற்றுகிறார்கள் எம் சமூகத்தின் இளைஞர்கள்.....
இன, நிற, மத, மொழி பேதங்களை மறந்து மனிதத்தை கரை சேர்க்க வேண்டும் என அள்ளும் பகலும் எம் சகோதர்ர்கள் உழைக்கிறார்கள்.....
இந்த சமூகத்தின் இத்தனை பணிக்கும் இந்த நாட்டின், உலகின் தலைசிறந்த எல்லா விருதுகளையும் கொடுக்கலாம்.......
ஆனால் இரண்டே இரண்டு கவலை....
முதலாவது....
இந்த சமூகத்தைத்தான் சில பேரினவதிகள் துரோகிகள், நாட்டுப் பற்றில்லாதவர்கள், சுயநலமிகள், பயங்கரவாதிகள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் குற்றம் சாட்டும் அத்தனை பயங்கரவாதிகளும்தான் இன்று களத்தில் கண்விழித்து பணிசெய்கிறார்கள்.
இரண்டாவது....
இத்தனை உயரிய குணங்களையும் கொண்ட சமூகம் மார்க்கத்தின் பெயரில் பிளவு பட்டிருப்பது தான்.
நிச்சயம் இத்தனை பண்புகளும் உள்ள இந்த சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் காலம் தூரத்திலிருக்காது.....
இந்த இரண்டுக்கும் தீர்வு கொண்டுவந்த அருள் மழையாக இது இருந்துவிட்டு போகட்டும்.
அதனால் நாம் செய்த அத்தனை நற்பணிகளுக்குமான கூலியாக அல்லாஹ் இதனைத் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.
அபூ பாதிஹ்

Aameen!
ReplyDeleteAmeen
ReplyDeleteWhere BBS, Ravana Balaya in the incident of Mawanella?
ReplyDeleteAmeen!!!
ReplyDeleteHahaha...
ReplyDeleteNice comment we need to think about it
ReplyDeleteநாம் சில கொள்கை ரீதியில் பிரிந்து இருக்கிறோம் அதை கியாம நாள் வரை தடுக்க முடியாது ஆனால்,முஸ்லிம்கள் என்ற ஒரு உணர்வு நம்மவர்களை விட்டு பிரியாது அல்ஹம்து லில்லாஹ்.கடந்த காலங்களிலும் இவ்வாறான பொதுவான விடயங்களில் நாம் ஓன்று பட்டே வந்துள்ளோம்.நம்மனைவரையும் அல்லாஹ் ஒற்றுமையோடு வாழ அருள் புரிவானாக.ஆமீன்.
ReplyDeleteMeendum ondrinayum kaalam imam mahdi avargal vanda pinne daan nadanderum!
DeleteWe need to unite as one Muslim umma not a xyz jamath.
ReplyDelete