முஸ்லிம்களே வாருங்கள், பள்ளிவாசல்களை கட்டுங்கள், நான் சீமெந்து தருகிறேன் - பௌத்த குரு அழைப்பு
-Mohamed Naushad-
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது முஸ்லிம்கள் வழங்கிய மகத்தான சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள கொலன்னாவ பிரதம பௌத்த குரு வஜிர சுமங்கல தேரர் தாம் முஸ்லிம்கள் குறித்து தவறாக புரிந்துகொண்டமைக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.
கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25ஃ05ஃ2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
முஸ்லிம்கள் கொலன்னாவ பகுதிக்கு ஆரம்பத்தில் வந்த போது போது தாம் சந்தேகம் கொண்டதாகவும் பள்ளிவாசல் கட்ட எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் எனினும் இந்த இயற்கை அனர்த்தமானது அந்த எண்ணத்தை போக்கிவிட்டுள்ளது.
வெளத்த்தில் பாதிக்கப்பட்ட பௌத்த சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் அதிகளவில் உதவினார்கள்.
இந்தநிலையில் முஸ்லிம்கள் கொலன்னாவ பகுதியில் எந்தப் பகுதியிலும் வந்து குடியேறலாம். பள்ளிவாசல்கள் கட்டலாம். அந்த பள்ளிவாசல்களை கட்டுவதற்கு முதல் ஆளாக நான் சீமெந்துப் பைக்கட்டுக்களை எனது கையினால் வழங்க தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
வெளத்த்தில் பாதிக்கப்பட்ட பௌத்த சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் அதிகளவில் உதவினார்கள்.
இந்தநிலையில் முஸ்லிம்கள் கொலன்னாவ பகுதியில் எந்தப் பகுதியிலும் வந்து குடியேறலாம். பள்ளிவாசல்கள் கட்டலாம். அந்த பள்ளிவாசல்களை கட்டுவதற்கு முதல் ஆளாக நான் சீமெந்துப் பைக்கட்டுக்களை எனது கையினால் வழங்க தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ் அதே போல் ஹிதாயத்தையும் அவருக்கு கொடுப்பானாக
ReplyDeleteபாா்த்தீா்களா...
ReplyDeleteஅன்று கூறியிருந்தீா்கள் எங்களை மீடியாக்களில் காட்டவில்லை என்று ஆனாலும் அவா்களின் ஆள் மணதில் பதிந்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும்....
இஸ்லாம் சமாதானத்தை கொண்டுள்ள மார்க்கம் அனைவரையும் சமாதானபடுததும்
ReplyDeleteAllah will take the responsibility of every deeds with Iklas Alhamdulillah
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஇவர்கள் மணதை இந்தளவு மாற்றியதிற்கு எனது றப்புக்கு முதற்கண் ( அல்ஹம்துலில்லாஹ்) இஃலாசுடன் களப்பணியில் ஈடுபட்ட,இஃலாசுடன் 1 ரூபா வேனும் வெள்ள நிவாரனம் வழங்கிய சகோதறர்களுக்கும் நன்றிகள்.கடந்த காலங்களில் இலங்கை முஸ்லீங்களின் நிலமையையும் தற்போதய நிலமையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.மேலும் இண நல்லிணக்கம் வளர துஆ செய்வோம்.
ReplyDeleteஅல்லாஹ் நம் அனைவரையும் புனித இஸ்லாத்தில் என்றென்றும் நிலைபெறச் செய்வானாக! நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளைப் பின்பற்றி பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் நல்லெண்ணத்தோடும், கௌரவத்தோடும் வாழ வழி செய்வானாக! ஏனைய சமூகத்தினருக்கும் ஹிதாயத் எனும் நேர்வழியைக் காட்டுவானாக! ஆமீன்.
ReplyDeleteபொதுவாக இலங்கையில் வந்த அனர்த்தம் சிங்களவர்களுக்காக ஏற்பட்டதாக இருக்கலாம் ஆனால் மஹியங்கனையில் இரு ஜாதிக்கிடையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினைக்கும் அல்லாஹ்வின் உதவி கிடைக்க பிரார்த்தனை செய்வோமாக! ஆமீன்
ReplyDelete