Header Ads



பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஹரீன் - சபாநாயகர் பாராட்டு

தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று -25- நாடாளுமன்றத்தில் மன்னிப்பை கோரினார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு ஹரின் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அவர் தமது மன்னிப்பை கோரினார்

நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் பொறுப்பின் அடிப்படையில் இந்த மன்னிப்பை தாம் கோருவதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அரசியல்வாதி என்ற அடிப்படையில் தாம் செய்த தவறுக்காக மன்னிப்பை கோருவது சிறந்த செயற்பாடு என்று குறிப்பிட்ட சபாநாயகர் இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெற்றால், தண்டிக்கக்கூடிய அதிகாரத்தை தமக்கு கட்சி தலைவர்கள் வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்

இதற்கிடையில் ஹரின் பெர்ணான்டோவை போன்று தகாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்திய மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர்களும் மன்னிப்பு கோரினால் சிறந்த விடயம் என்றும் சபாநாயகர் கூறினார்.

No comments

Powered by Blogger.