Header Ads



மஹிந்த ராஜபக்ஸ நெஞ்சில் அடித்து, சுட்டுக்கொண்டு உயிரிழப்பதாக கூறியுள்ளார்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் மகிந்த ராஜபக்ஷவின் பணியாட் தொகுதியின் தலைமை அதிகாரியின்   சாரதியூடாக வங்கியொன்றிலிருந்து 1,260 கோடி ரூபா பணம் காசோலை மூலம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பான தகவல்கள்  அந்த சாரதியூடாகவே வெளியாகியுள்ளதாகவும்  இது தொடர்பாக  விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

குறித்த சாரதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி நெஞ்சில் அடித்துக்கொண்டு  ஊழல் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் சுட்டுக்கொண்டு உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், தற்போது குறித்த சாரதியூடாக சில விடயங்கள் தெரியவந்துள்ளன. மகிந்தவின் நிதி விடயங்களை கவனிக்கும் காமினி செனரத் என்பவரின் சாரதியை அனுப்பி   2015 ஜனவரி 7ஆம் திகதி அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் இலங்கை வங்கிக் கிளையொன்றில் 4 காசோலைகள் மூலம் 1260 கோடி ரூபா பணம் வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

வங்கி சட்டத்தின்படி அவ்வாறு ஒரே நேரத்தில் இந்தளவு பணத்தை வங்கியிலிருந்து பெற முடியாது. ஆனால் அப்போது மகிந்தவே நிதி அமைச்சராக இருந்ததால் அவரின் உத்தரவாக இது இருந்திருக்கலாம். இதன்படி பெற்றுக்கொண்ட பணத்தை அந்த சாரதி மூடைகளில் போட்டு வாகனத்தில் எடுத்துச் சென்று காமினி செனரத்திடம் அவர் அதனை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை மூடி மறைப்பதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது எமது ஆட்சி அமைந்த பின் நடந்துள்ளது. அதாவது  அரசாங்கம் மாறினாலும் அரசு மாறவில்லைதானே அதுதான் இப்படி நடந்துள்ளது. 

இதேவேளை குறித்த நபர் 1260 கோடியை எடுத்துவரும் போது ஒரு கோடி ரூபாவை தான் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இதன்படிதான்  அவரை சி.ஐ.டி.யினர் விசாரித்துள்ளனர். எப்படியும் முன்னாள் அரசாங்கத்தின், முன்னாள் அதிகாரியின் ஆதரவாளரை வைத்துக்கொண்டே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் இப்போது தெரியவந்துள்ளது. 

நாம் நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த பல நிறுவனங்களை அமைத்துள்ள நிலையில், எதிலும் அகப்படாது அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டுள்ளார். அவருக்கு அதன்போது கோடியை எடுத்த விடயத்தை 5 இலட்சமாக குறைக்கின்றோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டை பொய் எனக் கூறுமாறு அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவின் கட்டிட பொறியிலாளர் ஊடாகவும் பல விடயங்கள் குறிப்பாக காணி விபரங்கள் தொடர்பான பல தகவல்கள் தெரியவந்துள்ளன. எவ்வாறாயினும் தற்போது தமக்கு எதிரான விசாரணைகளை நிதியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். இதனால் தான் நாம் மீண்டும் வருவோம் எனக் கூறிக்கொண்டு அதிகாரிகளை அச்சுறுத்தி விசாரணைகளை நிறுத்த முயற்சிக்கின்றனர். 

இன்று அவர்களுடன் இருந்தவர்களினூடாகவே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எப்படியும் நமக்கு ராஜபக்ஷக்கள் தொடர்பாக நன்றாக தெரியும். இதனால் சகல தகவல்களையும் நாம் அறிந்தே இருந்தோம்.  அத்துடன் குறித்த சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் மற்றும் அவரால் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Very good story. How many stories in his mind like these. Irresponsible minister uttering what ever comes t his mind without any logic. Why he cannot recover this money if he has all the evidence. Whitewashing everything.

    ReplyDelete

Powered by Blogger.