சாதித்துக்காட்டிய சரீனா பேகம், நவமணி செய்தி பிரதான ஆவணமானது - ருஷ்தி ஹபீப் அபாரம்
பிபிலை வலயக் கல்விப்
பணிப்பாளராக இலங்கை கல்விச் சேவையை சேர்ந்த சரீனா பேகத்தை நியமிப்பதற்கு
ஊவா கல்வித் திணைக்களம் நேற்று உயர் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தது.
2015ஆம்
ஆண்டு இறுதியில் பிபிலை கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சரீனா
பேகத்தின் நியமனத்தை ரத்துச் செது பிறிதொருவரை ஊவா கல்வித் திணைக்களம்
நியமித்திருந்தது.
தகுதி
அடிப்படையில் தனக்கு வழங்கிய நியமனத்தை தான் ஒரு முஸ்லிம் என்பதால் ரத்து
செய்ததாக சரீனா பேகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செதிருந்தார்.
இந்த
வழக்கினை சமரசமாகத் தீர்த்துக்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சு இணக்கம்
தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் வழக்கினை சமரசமாக தீர்த்துக்
கொள்வதற்கு இணக் கம் தெரிவித்தன.
உயர் நீதிமன்ற நீதியரசரான பரியாசாந்த டெப் நஸில் பெரேரா ஜே. ஆப்ருவ் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
நேற்று காணப்பட்ட இணக்கப்பாட்டினையடுத்து சரீனா பேகம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்கவுள்ளார்.
2015
இறுதியில் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட சரீனா பேகம் முஸ்லிம்
என்ற காரணத்துக்காக நீக்கப்பட்டபோது நவமணி அதன் தலைப்புச் செதியாக இதனை
வெளியிட்டிருந்தது.
சட்டத்தரணி
ருஷ்தி ஹபீப் பாதிக்கப்பட்ட கல்விப் பணிப்பாளர் சார்பாக ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கில் நவமணி செதி பிரதான ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி
ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
தமக்கு நடந்த அநீதிக்காக நீதிமன்றம் சென்று நியாயத்தைப் பெற்ற சரீனா பேகத்தை பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளன.


Excellent effort. Congratulation
ReplyDelete