Header Ads



10.000 புத்தகங்களை சேகரிக்கும் திட்டம் - புத்தளம் சகோதரர்களுக்கு கைகொடுப்போம்

பேஸ்புக் உபயோகிக்கும் நண்பர்களிடம் இருந்து மூன்று மாத காலத்தில் பத்தாயிரம் புத்தகங்களை சேகரிப்பது என்கிற ஒரு விடயத்தை ஆரம்பம் செய்துள்ளோம்.அது தொடர்பான ஒரு பார்வையே இது.

கடந்த மாதம் 23 ம்திகதி உலக வாசிப்பு தினம் அன்று தான் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது, அதன் பின்பு பலரோடு பேசி , நின்று, நிதானித்து ,யோசித்து ஒரு முடிவுக்கு வர சில நாட்கள் ஓடி விட்டது.

*திட்டம் என்ன ?

திட்டம் இது தான் - மூன்று மாத கால இடைவெளிக்குள் பாத்தாயிரம் புத்தகங்கள் நமது பேஸ்புக் பாவனையாளர்களிடம் இருந்து திரட்ட வேண்டும் . அதனை ஒரு சில நூலகங்களோடு தொடர்பான பொது அமைப்புக்களிடம் வழங்குதல் எனபதே திட்டம்..இது ஒரு சவால் ஆகும் அதனால் தான் ''புத்தக சவால்'' என்று பெயர்

*இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ??

கூடிய பட்சம் நீங்கள் நமக்கு ஒரு புத்தகத்தை வழங்குவதோடு , இந்த விடயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர வேண்டும் என்பதே நமது ஆசையாகும். விற்பதற்கு தடை என்றோ அல்லது உங்களின் பெயர் முகவரியையோ புத்தகத்தில் எழுதி அனுப்புங்கள்.

*பத்தாயிரம் புத்தகம் திரட்டல் எனும் இலக்கு சாத்தியம் ஆகுமா ?

உண்மையிலேயே இது ஒரு பெரிய இலக்காகும்.ஆனால் நண்பர்கள் சேர்ந்து செய்ய முனையும் போது இலகுவாக சாதிக்க முடியும் எனும் நம்பிக்கை நமக்கு உள்ளது.


இளைஞர் அமைப்புக்கள் , மாதர் சங்கங்கள் , பல்கலைகழகம் மற்றும் பிற கலாசாலைகளில் கற்போர் , பெரிய நிறுவனங்களில் பணி புரிவோர் உங்கள் இடங்களில் புத்தகங்களை மொத்தமாக திரட்டி நமக்கு வழங்கினால் இலக்கை சீக்கிரம் அடையலாம்.

அத்தோடு ஊடகவியல் நண்பர்கள் , அரசியல்வாதிகள், சமூக நிறுவனங்கள் , போன்றோரும் நமக்கான ஒத்துழைப்புக்களை தருவார்கள் என்றால் இன்னும் பெரும் உதவியாய் அமையும்.

*எப்படியான புத்தகங்கள் தேவை ?

உங்களுக்கு எப்படியான புத்தகங்கள் முடியுமோ அப்படியான புத்தகங்களை நமக்கு வழங்கலாம் . பலதரப்பட்ட இரசனை உடையவர்கள் இருப்பதனால் பல வகையான புத்தகங்களை வரவேற்கிறோம்.

பாடப்புத்தகம் / அரசியல் புத்தகம் /ஆளுமை விருத்தி புத்தகம் / வரலாறுகள் / மதம் சார்ந்தவைகள் / தத்துவ புத்தகங்கள் இப்படி உங்களால் முடியுமான எதுவாகவும் இருக்கலாம்.

*வரவேற்பு கிடைக்கும் எனும் நம்பிக்கை உள்ளதா ?

நாம் பேசிய அனைவரும் நல்ல முயற்சி என்றும் , நிச்சயம் ஆதரவு தருவோம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.இரண்டு நண்பர்கள் அவர்களின் நிறுவனம் மூலம் இணை அனுசரணை வழங்கவும் , இன்னும் ஒரு இணையதள செய்தி நிறுவனம் ஊடக அனுசரணை தரவும் இணங்கி உள்ளனர்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் எனும் நம்பிக்கையும் உண்டு.

*இறுதியாக ?

இதை ஒரு சவாலாக நினைத்தே நாம் ஆரம்பம் செய்கிறோம், ஆக உங்களால் முடியுமான ஒரு புத்தகத்தையோ அதற்கு மேலதிகமான புத்தகங்களையோ நமக்கு அனுப்பி வையுங்கள் அதோடு இவை பற்றிய தகவல்களை share / Copy Paste மூலம் அதிகம் அதிகம் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .

*புத்தகங்களை அனுப்பவேண்டிய / கையளிக்க வேண்டிய முகவரி ??

CORPORATE PARTNERS
AL-ABAYA
No-100,
Spill Road ,
Puttalam .
078 970 68 99

அல்லது

I-SOFT COLLEGE
No- 25,
Poles Road,
Puttalam .
077 35 55 540

தொகுப்பு - எம்.ஐ.எம்.இன்பாஸ்
077 58 68 885

1 comment:

  1. Please ask puttalam Muslim community in London to collect all those 10.000 books from schools sales and car boot sales in London so that they can send them all one go.. You do not need to have Facebook advert to do this ...
    A lot of Tamil community do this from London
    Why can not Muslims people in London do it ??
    Is it matter of bida to follow Tamils in this..

    ReplyDelete

Powered by Blogger.