மண்சரிவு அபாயம் - 60 பேர் வெளியேற்றம்
இரத்தினபுரி, அயகம, தெகபடகந்த பிரதேசத்தில் இருந்து 12 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் அப்பிரதேச மக்கள் வெளியேற்றப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகம் கூறியுள்ளது.
அதன்படி அங்கு வசித்த 60 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அப்பிரதேச விகாரை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment