Header Ads



சிரியாவுக்குள் நுழைந்து துருக்கி போர்விமானங்கள் அதிரடி தாக்குதல் - 55தீவிரவாதிகள் பலி


சிரியாவின் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து துருக்கி நாட்டு போர்விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சிலபகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் தீவிரவாதிகள் சிரியாவின் அண்டைநாடான துருக்கியின் எல்லைப்பகுதி அருகே முகாம்களை அமைத்துனர்.

இந்த முயற்சியை முறியடிக்க துருக்கி ராணுவம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், நவீனரக ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை துருக்கியின்மீது வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக,  ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து போர்விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் மூலம் நேற்று துருக்கி ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 55 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு சொந்தமான மூன்று ராணுவ வாகனங்கள் மற்றும் ராக்கெட் ஏவுதளங்கள் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாக துருக்கி ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.