கட்டார் இளவரசர்கள் இலங்கையில், இரகசியமாக காணி கொள்வனவு செய்கின்றனர்
நாட்டிலுள்ள பெரும் பரப்பான காணிகளை கட்டாரிலுள்ள இளவரசர்கள் கொள்வனவு செய்துள்ளனர். அமைச்சர் பைஸர் முஸ்தபா அதன் பின்னணியாக நின்று செயற்படுகிறார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த நான்கு வருடங்களில் இந்நாட்டிலுள்ள நான்காயிரம் சிங்கள யுவதிகளை முஸ்லிமாக மதம் மாற்றியுள்ளனர்.
அது மாத்திரமல்லாமல் உலமா சபையினால் 'தப்லீக் நிகாயா' எனும் அமைப்பு எற்படுத்தப்பட்டுள்ளது. அந்த தப்லீக் நிகாயா அமைப்பு, ஒரு நாளில் இந்நாட்டின் நகரப் பகுதியிலுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பை கையகப் படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நடவடிக்கைக்காக பெருமளவிலான நிதி அவ்வமைப்புக்கு கிடைக்கிறது. ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெளத்தர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் பாரியளவான பரப்புக்கொண்ட காணிகளை கட்டார் நாட்டிலுள்ள இளவரசர்கள் இரகசியமான முறையில் கொள்வனவு செய்துகொள்கின்றனர். அதன் பின்னணியில் அமைச்சர் பைஸர் முஸ்தபா செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் மத்திய கிழக்கிலிருந்து சுமார் 12 ஷேக்மார்கள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் இங்குள்ளனர். அது தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதியும் குரல்கொடுப்பதில்லை.
எனினும் அந்நடவடிக்கைக்கு எதிராக நாம் குரல்கொடுத்தால் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனவே குறித்த அமைப்புகளுக்கு வரும் நிதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டை விடவும் தற்போது நாட்டில் மோசமான வகையில் அடிப்படைவாதமும் ஆக்கிரமிப்புகளும் இஸ்லாம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
அதனை விடுத்து எமக்கெதிராக வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம்.
அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிப் பேசாது பொதுபல சேனா அமைப்பையே குற்றம் சுமத்துகின்றனர்.ஆகவே அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மீண்டும் தொடங்கிவிட்டான் வண்டவாளத்தை..
ReplyDeleteආයෙත් පටන්ගත්තා කන්දොස්කිරියාව...
When MRs sold the land to CHINA ? WHY BBS did not raise the case ?
ReplyDeleteARABS come to us and always DONATE money and LEND money to public projects of this country without interest basis, BUT Other countries even if they lend you money.. they demand with gaining.
YOU ONLY to DESTROY THE LAND a VIRUS to our sweet land.
மாதம் ஒரு காமடி
ReplyDelete