Header Ads



கட்டார் இளவரசர்கள் இலங்கையில், இரகசியமாக காணி கொள்வனவு செய்­­கின்­றனர்

நாட்­டி­லுள்ள  பெரும் பரப்­பான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இள­வ­ர­சர்கள் கொள்­வ­னவு செய்­துள்­ளனர். அமைச்சர் பைஸர் முஸ்­தபா அதன் பின்­ன­ணி­யாக நின்று செயற்­ப­டு­கிறார் என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.   

பொது­பல சேனா அமைப்பு கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 

கடந்த நான்கு வரு­டங்­களில் இந்­நாட்­டி­லுள்ள நான்­கா­யிரம் சிங்­கள யுவ­தி­களை முஸ்­லி­மாக மதம் மாற்­றி­யுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் உலமா சபை­யினால் 'தப்லீக் நிகாயா' எனும் அமைப்பு எற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த தப்லீக் நிகாயா அமைப்பு, ஒரு நாளில் இந்­நாட்டின் நகரப் பகு­தி­யி­லுள்ள 10 ஏக்கர் நிலப்­ப­ரப்பை கையகப் படுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­பட்­டுக் ­கொ­ண்­டி­ருக்­கி­றது. அந்­ந­ட­வ­டிக்­கைக்­காக பெரு­ம­ள­வி­லான நிதி அவ்­வ­மைப்­புக்கு கிடைக்­கி­றது. ஆக­வே இது­போன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தால் எதிர்­கா­லத்தில் பெளத்­தர்­க­ளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். 

மேலும் பாரி­ய­ள­வான பரப்­புக்­கொண்ட காணி­களை கட்டார் நாட்­டி­லுள்ள இள­வ­ர­சர்கள் இர­க­சி­ய­மான முறையில் கொள்­வ­னவு செய்­து­கொள்­கின்­றனர். அதன் பின்­ன­ணியில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறார்.

மேலும் ஒவ்­வொரு மாதமும் மத்­திய கிழக்­கி­லி­ருந்து சுமார் 12 ஷேக்­மார்கள் இலங்­கைக்கு வருகை தரு­கி­றார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான பாகிஸ்­தா­னி­யர்கள் இங்­குள்­ளனர். அது தொடர்பில் எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் குரல்­கொ­டுப்­ப­தில்லை.

எனினும் அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதி­ராக நாம் குரல்­கொ­டுத்தால் எமக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

எ­னவே குறித்த அமைப்­பு­க­ளுக்கு வரும் நிதி தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் தற்­போது நாட்டில் மோச­மான வகையில் அடிப்­ப­டை­வா­தமும் ஆக்­கி­ர­மிப்­பு­களும் இஸ்லாம் என்ற பெயரில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. ஆகவே முஸ்லிம் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

அதனை விடுத்து எமக்கெதிராக வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம்.  
அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிப் பேசாது பொதுபல சேனா அமைப்பையே குற்றம் சுமத்துகின்றனர்.ஆகவே அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

3 comments:

  1. மீண்டும் தொடங்கிவிட்டான் வண்டவாளத்தை..
    ආයෙත් පටන්ගත්තා කන්දොස්කිරියාව...

    ReplyDelete
  2. When MRs sold the land to CHINA ? WHY BBS did not raise the case ?

    ARABS come to us and always DONATE money and LEND money to public projects of this country without interest basis, BUT Other countries even if they lend you money.. they demand with gaining.

    YOU ONLY to DESTROY THE LAND a VIRUS to our sweet land.

    ReplyDelete
  3. மாதம் ஒரு காமடி

    ReplyDelete

Powered by Blogger.