இலங்கையை கடந்துசென்ற 'ரோனு' பங்களாதேஷை தக்கி, 21 இலட்சம் பேர் பாதிப்பு
வங்கதேசத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதிகளை "ரோனு' புயல் தாக்கியதில் 5 பேர் பலியாகினர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் 21.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: வங்கதேசத்தின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை -21- காலை கரையைக் கடந்த "ரோனு' புயல் பலத்த சேதத்தை விளைவித்தது.
கடற்கரை நகரமான போலாவில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான குடிசைகள் நாசமாகின. இருவர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துறைமுக நகரான சிட்டகாங்கில் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தாயும், மகளும் உயிரிழந்தனர்.
பட்டுவாகாலி நகரில் புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீரில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன. அந்நாட்டில் ரோனு புயலுக்கு இதுவரையில் 20 பேர் பலியாகி உள்ளனர். புயல் காரணமாக சிட்டகாங் நகரில் உள்ள ஷா அமாநத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்கா, குல்னா, பாரிஸால், சிட்டகாங் மற்றும் சில்ஹட் பகுதிகளில் புயலின் காரணமாக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 21.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment