Header Ads



இலங்கையில் 1670 அடி ஆழத்தில் சத்தியாக்கிரகம் - சுரங்கத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்


போகலை சுரங்கத் தொழிலாளர்கள் 50 பேர் இன்று, 1670 அடி ஆழத்தில் இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமது வருமானத்தை அதிகரிக்காமை, சேவையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமை மற்றும் நீக்கப்பட்ட ஊழியர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல் ஆகியவற்றுக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேராட்டத்தால் குறித்த சுரங்கத்தின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த விடயம் குறித்து அத தெரணவிடம் கருத்து வௌியிட்ட, போகலை கிராபிட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, "பணியாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல் மற்றும் சீருடைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக", தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் 154,000 ரூபா மட்டுமே இலாபமாக கிடைத்துள்ளதாகவும், எனவே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியாதுள்ளமை குறித்து பணியாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள போதும் அவர்கள் இவ்வாறான போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.