Header Ads



கிழக்கு மாகாண பாடசாலைகளை, நண்பகல் 12 மணியுடன் மூடப்படும் - எஸ்.தண்டாயுதபாணி

வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமிடம்  அம்மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்துள்ளார்.

இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இன்று -02- திங்கட்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார். 

தற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை உள்ளது.  இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

1 comment:

  1. ஏஸி அறைகளுக்குள் இருப்பவர்களால் சாமானிய மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியாது என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு இருக்கமுடியாது.

    இரண்டாம் தவணைக்காக பாடசாலை ஆரம்பமாகும் முன்பிருந்தே அசாதாரண வெப்பநிலையுடன் கூடிய காலநிலையால் மக்கள் அவதியுறுகின்றார்கள். வடமத்திய மாகாண அரசு கூட தமது மாணவர்களின் அவதியை உணர்ந்த பின்புதான் நமது அமைச்சருக்கு வெப்பம் புரிந்திருக்கிறதாக்கும்.

    இந்த லட்சணத்தில் எப்படி சிறப்பாக இருக்கமுடியும் நமது கிழக்கு மாகாண கல்வி நிருவாகம்..? எழுதிவைத்துக்கொள்ளுங்கள் கிழக்கு மாகாண கல்விக்கு இன்னும் பின்னடைவுதான் காத்திருக்கின்றது!

    ReplyDelete

Powered by Blogger.