Header Ads



கனவுகளுடன் காத்திருக்கும் கோத்தபாய..!

2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பல்வேறு காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இலங்கை அரசியல் களத்தில் இடம்பெறும் மோதலில் தலையிடாமல் அமைதியாக இருக்குமாறு கோத்தபாயவுக்கு, அவரது அரசியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நிலவும் நெருக்கடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஏதாவது ஒரு வழிமுறையில் தீர்த்து வைக்கப்படும்.

எதிர்வரும் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் தகுதியான வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு வாய்புள்ளதாக அரசியல் ஆலோசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய கோத்தபாய ராஜபக்ச ஒரு மூலோபாயமாக சில தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் மாத்திரம் அரசியல் அறிக்கைகளை விடுவதுடன், அமைதியான மட்டத்தில் இருந்து அரசியல்வாதியாக தனது மதிப்பினை அதிகரித்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்சவுடன் அவதானத்துடன் செயற்படுமாறு கோத்தபாயவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜனாதிபதி் மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ச அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை பதவிக்கு கோத்தபாய ராஜபக்சவை பெயரிடுமாறு அதன் பொரும்பான்மையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை மஹிந்த நிராகரித்ததோடு பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய மாத்திரம் எதிர்கால அரசியல் நடவடிக்கைகயை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.