தமிழ் இலக்கிய பண்பாட்டுப் பணிகளில், நாவலப்பிட்டி முஸ்லிம்கள்
நாவலப்பிட்டி இலக்கியச் சோலையை வளப்படுத்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வித் துறையில் தடம் பதித்தவர்கள் எனப் பல்வேறு ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து நாவலப்பிட்டி வரலாற்றின் ஒரு பகுதியாக 'தமிழ் இலக்கிய பண்பாட்டுப் பணிகளில் நாவலப்பிட்டி முஸ்லிம்கள்' என்ற மகுடத்தின் கீழ் ஒரு நூலாக வடித்துள்ளார் முன்னாள் சென் மேரிஸ் கல்லூரி ஆசிரியரும் ஊடகவியலாளருமான முஹம்மத் றஸீன் அவர்கள்.
அதன் வெளியீட்டு விழா மார்ச் மாதம் 20ஆம் திகதி நாவலப்பிட்டி ஸ்க்கை லார்க் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் பிரபல தொழில் அதிபரும் இலக்கிய ஆர்வளருமான திரு கே.ஏ.எஸ் ஹைதர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மலையகத்தின் பிரபல எழுத்ததாளரும் பன்னூல் ஆசிரியையுமான திருமதி நயீமா சித்தீக் நூலுக்கான அறிமுகத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கம்பளை வலைய உதவிக் கல்விப் பணிப்பாளரான அஷ்ஷேய்க் எம்.ஜே.எம். இல்யாஸ் அவர்கள் நூல் விமரிசனத்தை வழங்கினார். அடுத்து பிரதம அதிதி திரு ஹைதர் அலி அவர்கள் நூலின் முதற் பிரதியைப் பெற்று நூலை வெளிட்டு வைத்து சிறப்புச் சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தினார். பின்னர் நூலாசிரியர் ஏற்புரையோடு இறுதி நிகழ்ச்சியாக நூலாசிரியர் விழா ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த விழாவை நூலாசிரியரின் பழைய மாணவர்களும் நண்பர்களும் நலன் விரும்பிகளும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தொகுப்பை ஆசிரியர் ஏ.எச்.எம். அன்ஸார் வழங்கினார்.

Post a Comment