யா அல்லாஹ்! கண்ணீரோடு முறையிடுகின்றேன்!
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா!
வயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை. என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே!
பக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.
யாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும், பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ் உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ! என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.
யா அல்லாஹ், என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு, அடக்கம், பணிவு, வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி, மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில். இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா?
யா அல்லாஹ், ஆண்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையிலும் விலை பேச கூடிய மண்ணிலும் எங்களை படைத்து சோதனையாக ஆக்கி விட்டாயே!
என் ரப்பே! உன்னுடைய கட்டளையை நிராகரித்து விட்டு வீடு வாங்கி திருமணம் செய்யும் ஆண்களும் சொர்க்கம் செல்வார்கள் என்றிருந்தால் என்னை போல் வாழ்நாளில் வீடு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக திருமணமே செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாக காலம் கழித்த பெண்களுக்கு என்ன நியாயம் உள்ளது?
-ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த கண்ணீர் மடல்
இப்பெண்மணியைப் போன்ற எண்ணற்ற பெண்களின் துயரத்துக்கு பொறுப்புதாரிகள் யார் யாரென பார்க்கும்போது இது குறித்து அந்தந்த ஊரின் தலவர்களாக இருக்கும் மு(த்)தவல்லிகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உண்டு என்பதை எந்த ஊர் மு(த்)தவல்லியும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. மறுமையில் தலைவர்களாக இருக்கும் நீங்கள் இது குறித்தும் விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து ஆடம்பர திருமணங்களில் மேடையில் அமர்வதில் உச்சிகுளிர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தலைவர் பதவி என்பது வெறும் அதிகாரத்தை மட்டும் அனுபவிக்க உண்டாக்கப்பட்ட பதவி அல்ல, மாறாக பொறுப்புகளை சுமந்து அந்தந்த மஹல்லாவிலுள்ள இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுவும் அடங்கும் என்பதை ஒவ்வொரு தலைவரும், பொறுப்புதாரிகளும் உணர வேண்டும். -adm. N.I.

Ella aangalum veedum panamum petru kondu thirumanam seihiraarhal enru artha paduththa koodadu. Ivvarana pengalukku vaalvu kodukka eththaniyo sahothararhal emmil undu. Pengalin ennikkai samoohaththil adhihariththu kaanappadivadum idan oru karanam. Idanal thaan islam palathaara manangalai aahumaanadaaha aakkiyiurukkiradu. Idu ponravatrai ettru kolvaara neeengal kurippitta sahodhari? Seethanam paawam enbadu pol pala thaara manaththai ethirthu maatru madha nambikkahalai pin pattruvadhum paawam thaan
ReplyDeleteWhy not JAFFNA MUSLIM publish a notice and collect informations of this sort of pathetic plight of Muslim Girls and call for volunteers to give a helping hand or come forward to marry these girls in confidential manner.
ReplyDeleteThis is not one and only experience ! There are so many in the
ReplyDeletecommunity . There are instances where even money and property
is not enough . Beauty and virtue not enough and coming from
a respectable family background not enough . What do they
want then ? THEY ARE LOOKING FOR EDUCATION AND PUBLIC SECTOR
EMPLOYMENT ! That is why parents are dying to educate their
daughters . There are more than enough Muslim organizations
for everything but not to see the SUFFERINGS of brothers and
sisters and mothers and fathers . There are enough people to scream from the bottom of one's throat about Koran and Sunnah but in reality , all are dumb and deaf to the real suffocating sufferings of the community as Muslims . Able and fit Muslims are only looking for similar Muslims as partners ! All weak
Muslims are left to die suffering or offered suicidal
opportunities for more suffering ! Muslims must change .
The world has changed . Muslim girls must have secure
employment opportunities to face life's challenges.
Muslim organizations , especially those who engage in
various religious activities must at least visit
families that have problems created by neighbours and
close relatives due to the absence of guardians .
This girl has raised only one issue . One must go and
see how cruel , thuggish and filthy some Muslims behave
with their blood relatives when their guardians are
away from them for longer . If religious leaders are
ready to see for themselves such scenarios , I will
organize it for them . It could be a devastating fact
finding mission one has ever seen . They would see
for themselves what SOME POISONOUS MUSLIMS are capable
of doing even to orphans who are blood related and
neighbours . This kind of shameless label Muslims must
be exposed to the rest of the community .