Header Ads



"முரண்பாட்டின் முதிர்ச்சி"

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - அது தாய்க்கட்சி அதன் கிளைகள் இன்று வடக்கு தொடக்கம் தெற்குவரை வியாபித்து விரிந்து கிடக்கின்றது.  அக்கட்சியின் கட்சியின் வளர்ச்சிக்கட்டத்தை மூன்றாக வகுத்துநோக்க முடியும். 

1. 1985 – 1994 ஆரம்பகாலப்பகுதி 2. 1995 – 2000 இடைக்காலப்பகுதி 3. 2001 – 2015 தற்காலப்பகுதி

முஸ்லிம்களின் தனித்துவக்கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுத்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்றப் உயிருடன் இருக்கும் காலத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவரது கொள்கைகளை வெறுத்தவர்கள், அபிவிருத்தித் திட்டங்களை முடக்க நினைத்தவர்கள், தனித்துவக்கட்சி வேண்டாம் தேசிய நீரோட்டத்துடனேயே இணைந்திருப்போம் என பிரச்சாரம் செய்தவர்கள், ஏன் அன்னாரின் உயிரைப் பறிக்க முயற்சித்தவர்கள் என்ற பட்டியலை இன்னும் விரிவாக்கலாம். 

அதேவேளை அன்னார் உயிருடன் இருந்தகாலத்தில்  கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும் உண்டு. அவ்வகையில் தற்போதைய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தலைவருடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுதான் இப்பிரிகைக்கு காரணம். இதனை முதற்கட்டப்பகுதிக்குள் உள்ளடக்க முடியும். இவர்களில் கௌரவ அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவரின் அரசியல் முதிர்ச்சியினால் இன்னும் அரசியில் நிலைத்திருக்கின்றார். சேவைகளும் அளப்பரியது.

இடைக்காலப்பகுதியில் கட்சியின் அரசியல் அதிகாரம் வலுப்பெற்று தலைவரும் எந்தெந்த வழிகளில் கட்சியையும், சமூகத்தையும் பலப்படுத்த முடியுமோ அவ்வாறே பலப்படுத்தி சரித்திரம் படைத்தார். இக்காலத்தில் தேசியநீரோட்டக் கட்சிகளில் இணைந்திருந்த பலரும் தோல்வியடைந்து, அவர்கள்கூட (கனவான்கள்) தலைவருக்கு ஆதரவளித்து முழு இலங்கையும் முஸ்லிம் காங்கிரஸை திரும்பிப்பார்த்தது மட்டுமன்றி சர்வதேசமும் ஒரு கனம் தலைவர் அஷ்றப் அவர்களை உற்றுநோக்க தவறவில்லை.

மூன்றாவது கட்டத்தில்தான் தலைவரின் மரணத்துடன் கட்சி பாரிய சவால்களை எதிர்நோக்கியதுடன், பல பிளவுகள் ஏற்பட்;டு சிறு கட்சிகளும், அமைச்சர் ஹக்கீம் குறிப்பிடுவது போன்று குறுநில மன்னர்களும் உருவாகியதுடன், பிரதேசவாதமும் வெறிபிடிக்கத் தொடங்கியது. இதை முரட்டுத்தனமான பிடிவாதம் என்றும் அரசியல் முதிர்ச்சி அல்லது முதிராத் தன்மை என்றுதான் அழைக்க வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தினை தேசியக் கட்சிகளும் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டன. சிறுகட்சிகளும் தலைமைத்துவங்களும் முஸ்லிம் சமூகத்தை அதன் உரிமைக்காகவன்றி பணம் தேடுவதற்கான வியாபாரப் பொருளாக பயன்படுத்தத் தொடக்கின. அது பற்றி இங்கு விளம்பத்தேவையில்லை. 

இரண்டாம் கட்டத்தில் இருந்த செல்வாக்கு உடைந்து பணத்துக்கும், பதவிக்கும் சோரம் போகும் துர்ப்பாக்கிய நிலை உருவானதுடன், ஏனைய சமூகங்களும் ஏளனத்துடன் முஸ்லிம் அரசியலை நோக்கும் நிலை உருவானது. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம் தலைவர்களுக்கு முனாபிக் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதை மறக்க முடியாது. 

முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் மூன்றாம் கட்டம் முக்கியமான திருப்பங்களை இலங்கை முஸ்லிம்களின் சமூக அரசியலில் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. ஏனெனில் அந்தளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன.

1. முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியை இழந்தது.
2. முஸ்லி;ம் காங்கிரசிற்குள் தலைமைத்துவ போட்டிகள் ஏற்பட்டதும், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கிழக்கிலிருந்து வேறு திசைநோக்கிச் சென்றமையும்.
3. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகாணம் பிரிக்;கப்பட்டதும், முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கான சந்தர்ப்பம் உருவாகியமையும்.
4. வடபுல மக்களின் பிரச்சினைகளுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுக்கவென அமைச்சர் றிசாட் பதியூதின் வலுப்பெற்றமையும் தேசிய ரீதியில் அண்மைக்காலத்தில் வலுவடைந்தமையும்.
5. முஸ்லிம் காங்கிரஸ் வாரிசுரிமை பெற்ற கட்சியல்ல என்ற வகையில் பெண் தலைமைத்துவம் நீக்கப்பட்டமை.
6. முஸ்லிம் காங்கிரசிற்குள் தனிபர் ஆதிக்கம் அதிகரித்து, போராளிகள் கட்சிக்கே கட்டுப்பட்டமையும் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டமையும். அதாவது கட்சிக்குள் குறுநில மன்னர்களின் ஆதிக்கம் குறைவடைந்தமை.
7. கல்முனை கரையோர மாவட்டம் அரசியல் காய்நகர்த்தலுக்கான முக்கிய பேசுபொருளாக இதுகாலவரைக்கும் முஸ்லிம் காங்கிரசினுடைய ஆயுதமான மாறியமை.
8. அரசியலில் தனிநபர்கள் கோடிக்கணக்கான பணத்தினை செலவு செய்தே மக்களிடத்தில் வாக்குரிமையை வாங்கும் நிலை ஒன்று உருவானமை. அதாவது சமூக அரசியல் வியாபார அரசியலாக மாறியமை.
9. முஸ்லிம் மக்களின் உரிமை தேர்தல் கூட்டங்களின் பேசுபொருளாக மாறியமையும் உரிமைக்கான சாத்தியமான முன்னெடுப்புக்கள் கைவிடப்பட்டமையும்.
10. முஸ்லிம் காங்கிரசினுடைய ஆரம்பகாலக் கொள்கைகள் மருவிச் சென்றமையும், காலத்தின் தேவைக்கேற்ப மாற்றமடையாமையும்.
11. கட்சித்தாவல்கள், பட்டம் பதவிக்கான போட்டிகள் அதிகரித்தமை, தனிநபர்களுக்கிடையிலான பதவிப்போட்டிகள் வெற்றியடைந்தமை.
12. தலைவர் அஷ்றப் இருக்கும் காலத்தில் கோடரிக் காம்புகளாக இருந்து முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்தவர்கள் இன்று மு.காவுடன் இணைந்தமை.

இவ்வாறு ஏற்பபட்ட மாற்றங்கள் முரட்டுத்தனமானவை – முரண்பாடானவை என்றும், ஒவ்வொரு அரசியல்வாதிகளின் அரசியல் முதிர்ச்சி எனவும் ஆதரவாளர்கள் தமக்குள் பேசிக்கொள்வது நாம் அறிந்தவிடயம்தான். கருத்தியலின் வேறுபாடுகள் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது. முரண்பாடுகளுக்கு அதன் அடிப்படை விடயங்களில் இருந்து தீர்வுகாணப்படுன்றது. அத்தீர்வுகள் அ    ஹிம்சைவழியிலோ அதற்கு எதிராக வழியிலோ காணப்படலாம்.

அதன் வழியில் மு.கா. வில் இருந்து தலைமைத்துவ பிரச்சினைகளினால் பிரிந்து சென்றவர்கள் தங்கள் முகவரிகள் தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக  முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு கட்சியுடன் இணைந்து கொண்டார்கள். இது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின் ஒரு வெளிப்பாடு என்றுதான் கருதவேண்டியுள்ளது. சிலர் இற்றை வரைக்கும் மு.கா. பக்கமே திரும்பிப்பார்க்கவில்லை மாற்று கட்சியில் இருந்து தமது முகவரியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இது அமைச்சர் றிசாட்பதியுதீன் போன்றவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது. இன்னும் சிலர் கட்சி விட்டு கட்சி மாறிக்கொண்டே இருக்கின்றனர் இது இவர்களின் அரசியல் முதிர்ச்சி என்பதுடன் தமது முகவரி தொலைந்துவிடுமோ என்ற சந்தேகத்தில் பல இலட்ச ரூபாய்களை இழந்து தக்கவைக்க முயல்கின்றனர்.

எவ்வாறாயினும் தாய்க்கட்சியின் பாசறையில் தலைவர் அஷ்றப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் இன்று விரல்விட்டு கணக்கிடக்கூடிய சிலரே உள்ளனர். இக்கட்சியில் இன்று ஆதிக்கம் செலுத்துபவர்களில் பலர் தலைவர் அஷ்றப் இருக்கும்போது அன்னாரை தூற்றியவர்களும், எதிர்ப்பரசியல் நடாத்தியவர்களும் அரசியல் முதிர்ச்சியடைந்தவர்கள் போல் செயல்பட்டவர்களுமாகவே காணப்படுகின்றனர். 

அதேவேளை வாழ்நாள் முழுவதும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள் கொள்கைக்காக உழைத்தவர்கள் சோர்வடைந்து செல்வது அவர்களின் அரசியல் முதிர்ச்சிக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே கருதவேண்டியுள்ளது. அதற்கு காரணம் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தின் தனியாள் அதிகார செயற்பாடே காரணம் எனலாம். எவ்வாறாயினும் கொள்கைக்கான முரண்பாடுகள் முதிர்ச்சியடையும்போது அவை என்றைக்காவது வெற்றிபெற்றுத்தான ஆகும்.

எஸ்.எம். சஹாப்தீன்
ஆசிரியர்
கமு/அல்-அஸ்றக் தேசிய பாடசாலை, நிந்தவூர்.

4 comments:

  1. சஹாப்தீன் அவர்களே, உங்களின் நிறைய விடயங்கள் உண்மைக்கு புறம்பானதாகவே உணர்கிறோம்.

    1. ஹிஸ்புல்லாஹ் கட்சி கொள்கையில் முரண்படவில்லை மாறாக கனவான் ஒப்பந்தம் மீறப்பட்டமை. அடுத்த முரண்பாடு அவர் மதுபான பெர்மிட் எடுப்பதற்கு உதவி புரிந்தமை.

    2. வடக்கும் கிழக்கும் பிரிவதற்கு அதாவுல்லா காரணம் இல்லை அது ஜேவிபி நீதி மன்றத்தை அணுகி நீதி மன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது.

    3. சேகு இசதீன் கட்சியை விட்டு விலக்கப்பட்டது கொள்கை ரீதியான விடயமல்ல. அவர் தனிப்பட்ட முறையில் தனது கருத்துக்களை கட்சியின் உயர்பீடத்தின் கலந்தாலோசனை இன்றி வெளியிட்டமை.

    நீங்கள் அரசியல் முதிர்ச்சி என்று குறிப்பிடுவது ஒரு தெளிவற்ற உணர்வை நிலைமையை உருவாக்கி நிற்கிறது.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமுஅலைக்கும்,
    கட்டுரையாளருக்கு முதலில் நன்றிகள்.பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலை மாறி இன்றைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐயும் அதன் தலைமைத்துவத்தையும் பற்றிய உண்மையான விடயங்களை கல்விச்சமூகம் ,முற்போக்காளர்கள், சமூக மேம்பாட்டு அமைப்புக்கள் ,சமூக வலைத்தள குழுமங்கள் ,வலைப்பூக்கள், இணைய செய்திகள் என பலவற்றிலும் வாத விவாதங்களாக வெளிப்பட்டு தீப்பொறிகளாக தெரிக்கின்றது .யார் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல போகிறது தலைவர் ஹக்கீமிற்கு.
    பலரும் கூறுவது போல
    ஆரம்பக்கட்டம் இரத்தத்தாலும் ,கண்ணீராலும்,எமது தாய்மார்களின் முந்தானை துஆக்கலாலும் மிக உறுதியாக அஸ்ரோப்ப் இனால் இடப்பட்டது.
    இடைக்காலம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் இன் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.1995-2000 செப்டம்பர் வரை தலைவர் சாதிக்காதது எதுவுமே இல்லை.புதிய அரசியல் அமைப்பினைக்கூட உருவாக்கினார் என்றால் பாருங்கள்.2001 ஒன்றுடன் பிடித்தாது சனியன்.
    ஆராபக்கட்டதில் யாரெல்லாம் தலைவரையும் கட்சியையும் எதிர்த்தவர்களும் காட்டிக்கொடுத்தவர்களும் மற்றும் கட்சியில் இல்லாதவர்களும் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள்தான் இன்றையா ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தலைமத்துவத்திலிருந்து பிரதேச சபை தவிசாளர் வரை இருக்கின்றார்கள்.ஆகவே முதல் கட்டம்,பொட்காலத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தனித்துவம்,பேரம் பேசல் ,ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி மூன்றும் அரனாயக்கவில் தலைவருடன் சென்றுவிட்டது .மூன்றாம் கட்டம் என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இற்கு இல்லை என்றே கூறலாம்.ஏன் எனில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் உருவாக்காப்பாடல் வேண்டும் என்ற வாதங்களில் ஒன்றாக அம்பாறையில் நமது வாக்குகளைக்கொண்டு unp பாராளுமன்றம் செல்வதும் நமக்கு அதிகாரம் செளுத்துவதனை நாம் நிறுத்த வேண்டும் என்றே ஆரம்பமானது.இன்று முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தாயா கமகே முஸ்லிம்களை கருவருத்துக்கொண்டு இருக்கின்றார்.ஆரம்பித்த இடத்துக்கே கட்சி வந்துவிட்டதால் ஒரு கூட்டுப்புழுவின் வாழ்க்கை வட்டம் போல் வாழ்க்கை முடிந்துவிட்டது.
    அப்படியானால் இன்று இருப்பது வெறும் கூடு மட்டுமே.

    ReplyDelete
  3. நன்றி. குருவி...... அவை மூன்றும் அவர்களின் கொள்கையின் முதிர்ச்சி அல்லது முதிராத் தன்மைதான். அதாவுல்லா அதிகரம் குரல்கொடுததவர்......

    அஸ்லம் றவுப் ; தெளிவாக கூறினீர்கள் உண்மையை.

    ReplyDelete
  4. For me current SLMC is sub agent of UNP, this how I see the party now.
    To change this SLMC flow the same method UNP taken to restructure it, like power distribution. Such as deputy leader who got more people prefarance. And so on.

    ReplyDelete

Powered by Blogger.