கம்மல்துறை ஆற்றுமுகத்தில், நீராட சென்ற இருவர் மரணம்
(எம்.இஸட்.ஷாஜஹான்)
ஆற்றுமுகத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி: நீர்கொழும்பு கொச்சிக்கடையில் சம்பவம்
நண்பர்களுடன் கொச்சிக்கடை, கம்மல்துறை ஆற்றுமுகத்தில் நீராடச்; சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் கொச்சிக்கடை, கம்மல்துறை ஆற்றுமுகத்தில் நீராடச்; சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு தளுவகொட்டுவ பாத்திமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செயான் மதுசான் (19 வயது), சஞ்சய மதுசங்க (17 வயது) ஆகியோரே நீரில் மூழ்கி பலியானவர்களாவர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் அயல் வீடுகளில்; வசிப்பவர்களாவர். இத்துடன் இரு இளைஞர்களும் குடும்பத்தில் மூத்தவர்களாவர். இருவரினதும் தந்தைமார்கள் மேசன் வேலை செய்பவர்களாவர்.
கடந்த புதன்கிழமை பண்டிகை தினத்தன்று சம்பவத்தில் பலியான இளைஞர்கள் இருவரும் மேலும் மூன்று நண்பர்களுடன்; கசிந்து என்ற நண்பனின் முச்சக்கர வண்டியில் கம்மல்துறை ஆற்றுமுகத்தில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். இதன்போது இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். சந்துன் என்ற இளைஞன் அவர்களை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கியபோது அங்கு படகில் சென்று கொண்டிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, இளைஞர்கள் ஆற்றுமுகத்தில் நீராடச் சென்ற இடத்தில் மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.குறித்த ஆற்றுமுகத்தில் இதற்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நீர்pல் மூழ்கி மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆபத்தான இடங்களில் நீராடுவதை அரசு தடை செய்ய வேண்டும்.
ReplyDelete