"பூஜித்தவுக்கு பொலிஸ்மா அதிபராக, ஒப்புதல் வழங்கமுடியாது"
இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை ஏற்கமுடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
தென்மாகாணத்தில் நேற்று -20- இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க அண்மையில் அரசியல் அமைப்பு பேரவை அனுமதியை வழங்கியது
எனினும் இந்த பேரவையில் பொலிஸ் விசாரணையை எதிர்நோக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் உள்ளனர்
எனவே அவர்களால் ஒரு பொலிஸ் மா அதிபருக்கான ஒப்புதல் வழங்கப்படுவதை ஏற்கமுடியாது என்று பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment