எத்தியோப்பியாவில் ஏற்பட்டிக்கும் வரட்சியும், இலங்கையர்களின் கடமைகளும்..!!
-ARM. INAS-
1. கடந்த இரண்டு ஆண்டுகளாக எத்தியோப்பியாவுக்கு மழை கிடைக்கவில்லை இதனால் 4 லட்சம் பேர்இறந்துள்ளனர்இன்னும் 450000 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
2. நதிகள் ஏறிகள் கிணறுகள் அத்தனையும் வற்றிப் போயுள்ளன இதனால் பல லட்சக்கணக்காக கால்நடைகளும்இறந்து போயுள்ளன
3. தினமும் பெண்கள் தண்ணீரை தேடி சுட்டெரிக்கும் வெயிலில் 12 மணித்தியாலங்கள் நடந்து திரிகின்றனர்.
4. சிரமத்தில் மத்தியில் இவர்களுக்கு கிடைக்கும் நீரும் அசுத்தமான நீரே இதனைப் பருகியதால் பல குழந்தைகள்நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
5. கைக்குழந்தைகளுக்கு பால் கொடுக்க தாய்மார்களிடம் பால் கூட இல்லாத நிலை
6. பலரும் தம் சொந்த கிராமங்களை விட்டுவிட்டு சென்றுகொண்டிருக்கின்றனர்
7. பல குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதில்லை பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
எத்தியோப்பாவின் நிலை இன்னும் படுமோசமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இவர்கள் இதிலிருந்து மீள பல பில்லியன் பண உதவியும் தேவைப்படுகிறது.
5 வேளை தொழுகையிலும் கட்டாயம் நாம் இவர்களுக்காக துஆ செய்வோம்.
இந்த நிகழ்வுகள் நமக்கும் பெரும் அபாயகரமான எச்சரிக்கையை விடுக்கிறது. நாமும் சூழல் தொடர்பில் எந்தகவனமும் இல்லாமல் இப்படியே நமது நாட்டை கொங்ரீட் காடாக மாற்றிக் கொண்டு போனால் அடுத்த 40 அல்லது50 வருடங்களில் எமக்கும் இதே நிலை தான். காடுகள் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருகின்றனஆறுகள் அருவிகளில் குப்பைகள் வீசப்பட்டு அவையும் துர்நாற்ற கங்கைளாக மாறிவருகின்றன. இலங்கையும்எத்தியோப்பியாவாக மாறுவருவதற்கான அறிகுளிகள் ஆங்காங்கே தெரிகின்றன. இதற்கெல்லாம் காரணம் எல்நீநோகாலநிலை என்று கூறி விட்டு நாம் மௌனமாக இருப்பதில் பயனில்லை. அதற்கெதிராக போராட நாம்முன்வரவேண்டும்.
போலி நாடகமாடும் மல்டி நஷனல் கம்பனிகளின் பணத்தில் வயிறுவளர்க்கும் சர்வதேச சூழல் பாதுகாப்புநிறுவனங்களை நம்பி எந்தப் பயனுமில்லை.
நமது நாட்டை பாதுகாக்க, நமது சந்ததிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் தான் களத்தில் இறங்க வேண்டும்.மரங்கள் அருகி வருவதால் நமது சூழலுக்கு ஏற்பட்டு வரும் மோசமான விளைவுகள் தொடர்பில் நமதுமாணவர்களை விழிப்பூட்ட வேண்டும், பொதுமக்களை விழிப்பூட்ட வேண்டும்.
இது தொடர்பில் மிம்பர்கள் மேடைகளிலும் பேசப்பட வேண்டும். சுதந்திர தினத்துக்கு மட்டும் மரத்தை நட்டுவிட்டு நமது தேசபக்தியை காட்டிவிட்டு நின்றுவிடாமல். நாட்டில் உள்ள ஒவ்வொரு மஸ்ஜிதும் இதனை ஒரு நீண்ட வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
எல்நீநோவின் அபாயத்தை நாம் உணர வேண்டும். நாம் சூழலுக்கு செய்ய வேண்டிய அத்தனை அநியாயங்களையும்செய்துவிட்டு மழை நின்றவுடன் மழை வேண்டி தொழுவது நாம் வேண்டுமென்றெ நஞ்சை அருந்திவிட்டுஇறைவனிடம் கை ஏந்துவது போன்றதாகும். இப்படி செய்வது நாம் அல்லாஹ்வை ஏமாற்றுவது போன்ற ஒருசெயலாகும்.
இப்படியில்லாமல் மழை குறைவதற்கான காரணிகளை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்துவிட்டு இறைவனிடம்கையேந்துவோம்.
அல்லாஹ் அளவற்ற அருளாளன் அவனின் அருள்களுக்கு அளவேயில்லை இந்த சூழலும் அல்லாஹ்வின்அருளாகும் அல்லாஹ்வின் ஒரு அருளான சூழலை நாமாகவே அழித்துவிட்டு அல்லாஹ்வின் இன்னொருஅருளான மழையை நாம் அல்லாஹ்விடம் எப்படி கேட்கலாம்.
இந்த சூழல் அல்லாஹ் நமக்கு தந்த அமானிதமாகும் இவற்றை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்,பொறுப்பாகும். மறுமை நாளில் நமது பொறுப்புக்கள் பற்றி அல்லாஹ் நிச்சயம் கேட்பான்.
உங்கள் ஊரில் உள்ள கிணறு,ஆறு,ஏரிகள் கடற்கரைகள், மரங்கள் அத்தனையும் அல்லாஹ்வால் உங்கள் பொறுப்பில்விடப்பட்டவை அவை நாசமாகிக் கொண்டு வருவதாயின் நாம் ஒவ்வொருவரும் அவற்றுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஏதேதோ சில்லறை விடயங்களுக்காக மேடை வைத்து விவாதித்து சண்டையிடுகிறோம். சூழலை பாதுகாப்பதும்நபிகளாரின் மிக முக்கியமானதொரு சுன்னாவாகும். அதன் வெளிப்பாடுதான் நபியவர்கள் உஹத் மலையை பார்த்துதான் உஹத் மலையை நேசிப்பதாக கூறினார்கள்.
இந்த சுன்னாவை உயிர்ப்பிக்க மேடை போடுவோம் இது தொடர்பில் விவாதிப்போம். சூழலைஅழிப்பவர்களுக்கெதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்வோம். சூழலை நாசப்படுத்துவதென்பது பல சந்ததிகளையேஅழித்துவிடும் மாபெரும் ஒரு தீமையாகும் .
உண்மையிலேயே இது தான் காலத்தின் தேவையாகும். தேவையான நேரத்தில் தேவையான பொருத்தமானசெயலை செய்வதே சிறந்த அமலாகும். சமகாலத்தில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய முக்கிய அமல்களில்இதுவும் ஒன்றாகும்.




let us help save the African by offering them any support atleast by making dua for them. Water is biggest gift of Allah. Even when we make wudhu we should save water.
ReplyDelete