Header Ads



"வடகிழக்கு தமிழர் தாயகம் என பிர­க­டனம் செய்ய,­ தமி­ழர்­க­ளுக்கு எந்தவித­ உரி­மை­யு­மில்லை"

-பி.எம்.எம்.ஏ.காதர்-

வட­ மா­காண சபையின் தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழி­வு­களில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் அபி­லா­சைகள் சரி­யாக இனங்­கா­னப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்து கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

“கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம்” (FEMCO) சார்பில் அதன் தலைவர் மௌலவி இசட். எம். நதீர் வெளி­யிட்­டுள்ள அந்த அறிக்­கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, தமிழ் அர­சியல் கட்­சி­க­ளாலோ அல்­லது முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளாலோ இனப்­பி­ரச்­சி­னைக்­கான முழு­மை­யான தீர்வுத் திட்­ட­மொன்று இது­வரை முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் வட­மா­காண சபை முந்­திக்­கொண்டு அவ்­வா­றான தொரு தீர்வு முன்­மொ­ழி­வு­களை வெளி­யிட்­டி­ருப்­பது கவ­னத்­திற்­கு­ரிய விட­ய­மாகும். 

ஆனால் அத்­தீர்வுத் திட்ட முன்­மொ­ழி­வு­களில் கிழக்கில் வாழும் முஸ்­லிம்­களின் அர­சியல் அபி­லா­சைகள் முறை­யாக உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தனை வருத்­தத்­துடன் தெரி­விக்­கின்றோம். குறித்த தீர்­வுத்­திட்­டத்தில் பின்­வரும் இரண்டு விட­யங்கள் முஸ்­லிம்­களால் ஏற்றக் கொள்­ளப்­பட முடி­யா­த­வை­க­ளாகும்:-

1. இலங்­கை­யா­னது பெரும்­பான்­மை­யாக தமிழ்­பேசும் பிர­தே­சங்­களைக் கொண்ட வட மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் மற்றும் பெரும்­பான்மைச் சிங்­களம் பேசும் பிர­தே­சத்தைக் கொண்ட ஏனைய ஏழு மாகா­ணங்கள் மற்­றொரு மாநி­ல­மா­கவும் பிர­க­ட­னப்­ப­டுத்தல் வேண்டும்.

2. வட, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்­லிம்கள் ஓர் அல­கா­கவும், மலை­யகத் தமிழர் ஓர் அல­கா­கவும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.

இலங்­கையை இரண்டு மாநி­லங்­க­ளாகப் பிரித்தல் என்ற கோரிக்­கை­யா­னது மறை­மு­க­மாக வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே கிழக்கு முஸ்­லிம்கள் நோக்­கு­கின்­றனர்.

வடக்­குடன் கிழக்கை வலிந்து இணைக்கும் எந்த நட­வ­டிக்­கைக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு மத்­தியில் எதிர்ப்­புக்கள் வலு­வ­டைந்­துள்ள நிலையில் அதனைத் தணித்து, தமது அர­சியல் அதி­கார இலக்கை வேறு­வி­த­மாக அடைந்து கொள்ள தமிழர் தரப்பு முயற்­சிக்­கின்­றது என்ற நியா­ய­மான அச்சம் இதன்­மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் எழுந்­துள்­ளது. 

கிழக்கை வடக்­குடன் இணைக்­க­வேண்டும் என்று கோரிக்கை விடு­வ­தற்கோ, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று பிர­க­டனம் செய்­வ­தற்கோ வட­புலத் தமி­ழர்­க­ளுக்கும் வட­மா­காண சபைக்கும் எந்த வித­மான தார்­மீக உரி­மை­யு­மில்லை. கிழக்­கி­லங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் தமி­ழர்க்ள 39.79 வீதத்­தைக்கொண்ட ஒரு சிறு­பான்­மை­யினர் என்­ப­தையும் கிழக்கின் மூன்று மாவட்­டங்­களில் இரண்டில் தமிழர் சிறு பான்­மை­யினர் என்­ப­தையும் தமி­ழர்­த­ரப்பு எப்­பொ­ழுதும் மனதில் வைத்­தி­ருத்தல் வேண்டும். 

கிழக்கில் சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்கள், தனது இனத்தை பெரும்­பான்­மை­யி­ன­ராகக் கொண்ட வட மாகா­ணத்­துடன் இணை­வதன் மூலம் அங்­கு­வாழும் ஏனைய இனத்­த­வரை சிறு­பான்­மை­யி­ன­ராக்கி அவர்கள் மீது அதி­கார மேலா­திக்­கத்தை பிர­யோ­கிக்க முனையும் ஒரு மறை­முக முயற்­சி­யா­க­வுமே இது கரு­தப்­ப­ட­வேண்டும்.

மற்­றப்­படி, முஸ்லிம் தன்­னாட்­சிப்­பி­ராந்­திய அலகு என்­ப­தெல்லாம் நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றதும் இன­மு­ரண்­பாட்டை கூர்­மை­ய­டையச் செய்­வ­தற்­கு­மான யோச­னை­க­ளே­யன்றி வேறில்லை. 

மாகா­ணங்­க­ளுக்கு சமஷ்டி என்ற பெய­ரிலோ அல்­லது வேறு பெயர்­க­ளிலோ உச்ச அதி­காரம் வழங்­கப்­ப­டு­வதை முஸ்­லிம்கள் ஒரு­போதும் எதிர்க்­க­வில்லை. முஸ்­லிம்­களின் கோரிக்­கையும் அதுதான்.

ஆனால் வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­துதான் பிரச்­சி­னை­யாகும் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ வடக்­குடன் கிழக்கை இணைக்கும் முயற்­சிக்கு கிழக்கின் முஸ்லிம் சமூகம் தனது எதிர்ப்பைத் தெரி­விக்கும் என்­பதை தமிழர் தரப்­புக்கு மாத்­தி­ர­மல்ல முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் அழுத்­த­மாகத் தெரி­விக்க விரும்­பு­கின்றோம்.

வட, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்­லிம்கள் ஓர் அல­கா­கவும் மலை­யகத் தமி­ழர்கள் ஓர் அல­கா­கவும் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற முன்­மொ­ழிவின் மூலம் தமிழர் தரப்பு இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் இருப்­பையும் அடை­யா­ளத்­தையும் அவர்­க­ளது பூர்­வீக உரி­மை­யையும் தவ­றா­கவே மதிப்­பிட்­டுள்­ளது என்­பது தெளி­வா­கின்­றது.

சுமார் 1000 வரு­டங்­க­ளுக்கு மேல் பூர்­வீ­கத்தைக் கொண்ட முஸ்­லிம்­களை 150வருட வர­லாற்றைக் கொண்­டதும் பிரித்­தா­னி­யரால் பெருந்­தோட்­டங்­க­ளுக்கு தருவிக்கப்பட்டவர்களுமான மலையக சமூகத்துடன் ஒப்பிட்டிருப்பதானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

நாம் இதன் மூலம் மலையகத் தமிழர்களை அகௌரவப்படுத்தவில்லை அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகள் என்ற கௌரவத்தையும் அவர்களது உரிமைகளையும் பெரிதும் மதிக்கின்றோம்,

ஆனால் முஸ்லிம் சமூகத்தை மலையகத் தமிழர்களுடன் ஒப்பிட்டு அவர்களது பூர்வீகத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையையே கண்டிக்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. நதீர் Sir, நாங்கள் எதை வலியுறுத்த நினைத்தமோ அதை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். எங்களது பணிவான வேண்டுகோள் இது சம்பந்தமாக மக்களுக்கு விளிப்பூட்ட வேண்டும். முக்கியமாக இளைஞர்களுக்கு. உங்கள் ஆக்கங்களும் கருத்துக்களும் மேலும் மேலும் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் துணையும் உதவியும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  2. Meisam 60% veetham yaar erukuranga boss atha paarunga muthal

    ReplyDelete
  3. இனப்பிரச்சினை சார்ந்த முன்னெடுப்புக்களில் "தமிழ் பேசும் மக்கள்" என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்பட வேண்டும். மொழியொன்றை மட்டும் கொண்டு ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியாது. இனமொன்றை பாகுபடுத்தும்போது, அதன் தோற்றம், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், மதம், மொழி, பழக்கவழக்கம் என பல்வேறு விடயங்கள் அளவு கோல்களாக எடுக்கப்படுகின்றன.
    தமிழே தாய்மொழி என்பதற்காக முஸ்லிம்களை, தமிழர் என்ற இனத்திற்குள் வரையறுப்பது பிழையானது.

    முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜனநாயக ரீதியில் போராடி முஸ்லிம்களால் பெறப்பட வேண்டும். தமிழரின் தனியலகு கோரிக்கை என்பது, நாட்டை துண்டாடுவதற்கான மூல உபாயமாகும். அது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.