மகிந்தவின் கிண்டல்
சிறிலங்கா பிரதர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரவேற்றிருக்கிறார்.
அங்குனுகொலபெலஸ்ஸவில் நேற்று இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”அயலில் உள்ள நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
சீனாவின் நிதியில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்த முன்னைய அரசாங்கத்தை, தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்கள் சீனாவை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள்.
சீனாவின் நிதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக அவர்கள் கருத்துக்களை மட்டும் வெளியிடவில்லை, ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த திட்டங்களையும் இடைநிறுத்தினார்கள்.
அந்த திட்டங்கள் தொடரப்பட்டிருந்தால், நாட்டின் அதிவேலை நெடுஞ்சாலை வலையமைப்பு விரிவடைந்திருக்கும்.
புதிய ஆண்டிலாவது, தமது அரசியல் எதிரிகளை அரசாங்கம் பழிவாங்காது என்று நம்புவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

MR giving punishmedt to the thieves, is it political revenge in your aspent??
ReplyDeleteசீனா மகிந்தவை கைவிட்டு விட்டது. நான் எடுத்துக்கொண்டதை என்னோடு விட்டுவிடுங்கள் என்கிறார்.
ReplyDelete