Header Ads



வடமாகாண சபைக்கு எதிராக, மகிந்த சீற்றம்

மாகாண சபைகளின் தேவைக்கேற்றவாறு மாநிலங்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை – கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றமை தொடர்பில் வட மாகாண சபையினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளின் தேவைக்கேற்றவாறு மாநிலங்களை உருவாக்குதல், மாநிலங்களை இல்லாது செய்தல் போன்ற விடயங்களை அவர்களால் முன்னெடுக்க முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் உள்ளதாகவும், அதனால் அந்த செயற்பாட்டை முன்னெடுக்க தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனக் கூறியுள்ள அவர்,

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் நாட்டை விரும்பும் நபர்கள் இருக்கின்றமையினால் தாம் கூறுகின்ற விதத்தில் அனைத்தும் இடம்பெறும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.