Header Ads



விக்கினேஸ்வரனின் வலியுறுத்தல், முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இச் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்.

இதனை முறியடிப்பதற்கான முன் நடவடிக்கையாகவே இலங்கைக்கு உதவும் நாடுகள் உட்பட முஸ்லிம் நாடுகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்புலம் இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரேயொரு சர்வதேச சக்தி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு என தங்களின் சந்திப்புகளின்போது வலியுறுத்திக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக செவிமடுத்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என உறுதிமொழியும் உத்தரவாதமும் அவர்களால் தரப்பட்டதாகவும் ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.

2 comments:

  1. ஜமீல் அவர்களே, மிகவும் அவசரப்பட்ட விடயமாகவே இதை பார்க்கிறோம். நடுநிலைமையில் உள்ள சிங்களமக்களும் அரசாங்கமும் முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டும், அன்னியப்படவும் பார்பதுக்குரிய விடயமாகவே பார்க்கிறோம். வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பதை விக்கினேஸ்வரன் புதிதாக கூரவில்லை. மிகவும் நீண்ட காலமாக தமிழ் தலைவர்களும் மக்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனா அடிச்சி சாவுறதுக்கு முன்னாள் தான் அடிச்சி சாவுரது என்பது இதைத்தானோ. சும்மா அங்கயும் இங்கயும் கூட்டி திரியாமல் முதலில் உங்களது கருத்தையும் முன்வையுங்கள்.

    ReplyDelete
  2. அகதிகளுக்கு வீடுகட்ட காசு தாறேண்டு
    சொல்லலையா?
    நீங்க கேக்கவே இல்லியா?

    ReplyDelete

Powered by Blogger.