அரசாங்கம் திணருகிறது - அமைச்சர் எஸ்.பி.
நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை அளித்து அரசாங்கம் திணறி வருவதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரே தடவையில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கியமையே நாட்டின்பொருளாதார நெருக்கடிக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே தடவையில் பத்தாயிரம் ரூபா சம்பளம் உயர்த்தப்பட்டதனால் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிலைமை ஆரோக்கியமானதாக இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் தற்போதைய அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலைமை காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கம் சில கடன் பெறுகைகளை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்காத போதிலும், பொருளாதாரம் இவ்வளவு பாதகமான நிலைமையை அடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்த காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூர்த்தி கொடுப்பனவு 200 வீதமாக உயர்த்தப்பட்டமை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment