Header Ads



இலங்கையைச் சேர்ந்த மொஹமட் ஜமாலுதீனுக்கு, பாகிஸ்தானின் அதியுயர் விருது


இலங்கையின் ஒலிபரப்பாளர் ஒருவருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கௌரவம் அளித்துள்ளது.
அந்நாட்டின் சிவில் விருதான சித்தாரா இம்தியாஸ் விருது, இலங்கையில் முன்னாள் ஒலிப்பப்பாளர் மற்றும் காஸ்மீர் கற்கை அமைப்பின் ஊடக ஆலோசகரும் தலைவருமான மொஹமட் ஜமாலுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஜனாதிபதி மம்மூன் ஹூசைன் இந்த விருதை பாகிஸ்தானின் தேசிய தினநிகழ்வை முன்னிட்டு வழங்கியுள்ளார்.
காஸ்மீர் மக்களின் விடுதலைக்காக பாடுபட்டமைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சித்தாரா  இம்தியாஸ் விருது பாகிஸ்தான் மூன்றாவது அதியுயர் விருதாகும்.
ஜமாலுதீன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக பதவிவகித்தார்.
இதேவேளை ஓய்வின் பின்னர் காஸ்மீர் கற்கை மையத்தை அமைத்த அவர், காஸ்மீர் மக்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு புரியவைக்கும் செயற்பாட்டை மேற்கொண்டார்.

1 comment:

Powered by Blogger.