Header Ads



"வக்கிரத்தனமான செயல்"

வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாண சபையின் தீர்வுத்திட்டத்தை முஸ்லிம் உலமா கட்சி முற்றாக மறுத்திருப்பதுடன் இதனை எதிர்க்கும் தீர்மாணத்தை முஸ்லிம் ஒருவரை கொண்ட கிழக்கு மாகாண சபை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

வடக்கு கிழக்கை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி பிராந்திய சபை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது கொடிய விசத்துடன் சீனி மிட்டாய் கலக்கப்பட்டது போன்ற வக்கிரத்தனமான செயலாகும்.  முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராக இருந்தாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் அல்ல. மாறாக ஆதி காலம் முதல் இலங்கையில் அறபு மொழியில் பேசி வந்த அவர்கள் தமது தமிழ் சூழல் காரணமாக தமிழ் பேசுபவர்கள். இன்றும் கூட அவர்களின் பேச்சு வழக்கில் 20 வீதத்துக்கும் அதிகமான அறபுச்சொற்கள் உள்ளன.

அத்துடன் முஸ்லிம்கள் தம்மை தனி இனமாகவே நோக்குகின்றனர் என்பதுடன் இது வரை காலமும் தமிழ் மக்களும் முஸ்லிம்களை தனி இனமாகவே பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் வட மாகாண முஸ்லிம்கள் தனியாக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதே போல் 34 வீதமாக வாழும் மட்டக்களப்பு முஸ்லிம்கள் 4 வீத காணிகளுக்குள் முடக்கப்பட்டு தமிழ் பகுதிகளில் அவர்கள் சுதந்திரமாக காணிகள் வாங்கி வசிக்க முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளதுடன் யுத்த காலத்தில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டமை  என்பது தமிழர் தரப்பால்  முஸ்லிம்கள், முஸ்லிம் இனமாக பார்க்கப்பட்டதனால்த்தான். அவர்களை தமிழ் அதிகாரிகள் கூட தமிழர்களாக பார்க்கவில்லை.

அதே போல் முஸ்லிம்களுடன் வாழ முடியாது என கோரியே கல்முனை தமிழர்கள் தமக்கென தனியான பிரதேச செயலகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவ்வாறெல்லாம் தமக்கு வாசியான நிலைகளில் முஸ்லிம்களை வேறாக பார்ப்பதும் அதே போல் தமக்கு வாசி என வரும் போது முஸ்லிம்களையும் தமிழர்கள் என நடிப்பதும் தமிழ் அரசியல்வாதிகளின் தொடரான நிலைப்பாடாகும்.

ஆகவே வட மாகாண சபையின் மேற்படி பரிந்துரையை உலமா கட்சி மற்றாக நிராகரிப்பதுடன் கிழக்கு மாகாணம் தனியாக இருப்பதுடன் கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைத்துக் கொள்ளலாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அவ்வாறு நடந்தால்; கிழக்க மாகாண சபை சிங்கள மக்களையும் கொண்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமாக இருக்கும்.

1 comment:

  1. இந்த முபாரக் கொள்கையற்றவராக இருந்தாலும் இவருடைய இந்த கருத்தை ஏற்றுகொள்கின்றேன். இவர்கள் பசும்தோல் போற்றிய புலிகள். இவர்களை நம்பி கிழக்கை நாம் இழந்து விட்டால் அது வரலாற்று தவறு

    ReplyDelete

Powered by Blogger.