Header Ads



இலங்கையில் பாகிஸ்தான் மரக்கறிகள்


பாகிஸ்தானில் இருந்து மரக்கறிகளை அதிகளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்காவின் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளை அதிகளவில் சிறிலங்காவுக்கு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகளுக்கு தீர்வைகளில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாகவும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. pls. import the following as well, i like it.

    Pakistan mendarine
    Super kernal basmathy
    Pakistan Mango.

    ReplyDelete

Powered by Blogger.