"பொலிஸ் நிலையத்திலேயே திருட்டு"
லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இன்று -14- அதிகாலை 1.00 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 ரிவோல்வர்களும் திருடப்பட்டன.
எனினும் துப்பாக்கி ரவைகள் திருடப்பட்டிருக்கவில்லை என்றும் சாரம் மற்றும் சேட் அணிந்த நபர் ஒருவரினாலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளதுடன், அவர்கள் மதுபோதையில் இருந்தனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

මෙවාග දෙවෙල් ජාතික ආරක්ෂාවට ප්රෙනයක් නෙද්ද
ReplyDeleteகொண்டு போனவன் எத்தன பேர போட்டு தள்ளப் போறானோ......
ReplyDeleteபொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் காவஸ் போட வேணும்.