வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புடையதாகக்வாகனத்தை, செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்கிறது
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிபென்டர் ரக வாகனத்தை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளது.
இந்த வாகனத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள நீதிமன்றில் ஆஜராகுமாறு செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
இந்த டிபென்டர் ரக வாகனத்தை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பெற்றுக்கொண்டு, அந்த வாகனத்தை சிரிலியே சவிய அமைப்பிற்கு வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சிரிலியே சவிய அமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவின் தலைமயிலான ஓர் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் புதல்வர் ஒருவரின் உத்தரவிற்கு அமைய இந்த டிபென்டர் ரக வாகனம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் அனுமதியின்றி, நிறம் பூசப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பிரபு பாதுகாப்பு பணிகளுக்காகவும் பின்னர் கார்ல்டன் விளையாட்டு அலைவரிசையின் பணிப்பாளரது போக்குவரத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
தாஜூடீன் கொலை தொடர்பில் இந்த வாகனம் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட முடியும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வாகனம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இது ஒரு முடிவிலா மெகா தொடர் அரசியல் நாடகம்
ReplyDelete