தற்போதைய ஆட்சியாளர்கள், சீனாவின் காலடியில் விழுந்துள்ளனர் - பொது எதிரணி
சீனாவின் பொருளாதாரக் கொள்கையை யும் வேலைத்திட்டங்களையும் எதிர்த்தவர்களுக்கு இன்று சீனாவின் காலடியில் விழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்தும் அவர்களை நிராகரித் தும் தம்மால் எந்தவித பொருளாதார நடவடிக்கைகளையும் கையாள முடியாது என்பதை இன்று அரசாங்கம் விளங்கிக்கொண்டுள்ளது என மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர்.
எமது ஆட்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத்திட்டங்களை குறைகூறியவர்கள் இன்று
அதே வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததன் மூலமாக மஹிந்த ராஜபக் ஷ சரியான திட்டங்களையே முன்னெடுத்தார் என்பது நிரூபித்துள்ளனர் எனவும் மஹிந்த அணியினர் குறிப்பிட்டனர்.
பொது எதிரணியால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே பொது எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது அப்போதைய எதிரணியாக இருந்தவர்களுக்கு மஹிந்த மட்டுமல்ல சீனாவும் எதிரியாகவே தெரிந்தது. நாம் சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார உடன்படிக்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நாட்டை சீரழிக்கும் வகையிலேயே தெரிந்தது. அதேபோல் சீனாவின் காலணித்துவ நாடாக இலங்கை மாறுவதாகவும், சீனாவின் பொருளாதார கொள்கை எமது நாட்டின் தேசிய பொருளாதார கொள்கையை அழித்துவிடும் எனவும் கூறினார்கள். ஆனால் இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவும் சீனாவின் வேலைத்திட்டங்களும் நல்லதாக தெரிகின்றன. குறிப்பாக நாம் ஆரம்பித்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை மோசமானதாக தெரிவித்தவர்கள் இன்று அதே வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றனர். அதேபோல் அம்பாந்தோட்டையில் சீனாவின் தொழிற்சாலை வலயம் அமைக்கவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆகவே அன்று சீனாவை எதிர்த்தவர்களுக்கு இன்று மீண்டும் சீனாவின் காலடியில் விழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்தும் அவர்களை நிராகரித்தும் எம்மால் எந்தவித பொருளாதார நடவைக்கைகளையும் கையாள முடியாது என்பதை இன்று அரசங்கம் விளங்கிக்கொண்டுள்ளது. ஆகவே எமது ஆட்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்ட வேலைத்திட்டங்களை குறை கூறியவர்கள் இன்று அதே வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததன் மூலமாக மஹிந்த ராஜபக் ஷவை சரியென நிருபித்துள்ளனர். ஆகவே இந்த ஆட்சி மாற்றம் எவ்வாறு வந்தது என்பதும் மக்களுக்கு தெரிந்துள்ளது.
அதேபோல் ஜி 7 மாநாடுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி பயணமாகின்றார். அதன் பின்னர் மீண்டும் நாட்டில் இடைக்கால பொருளாதார கொள்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றனர். ஆகவே இப்போது அந்த பொருளாதார கொள்கையையும் முன்வைத்தால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முன்வைக்கும் மூன்றாவது பொருளாதார கொள்கையாகும். ஆகவே இந்த அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையில் நிலையான தன்மையில் இல்லை என்பது தெரிகின்றது. மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்ற ஆட்சியை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. அதை அரசாங்கம் அடிக்கடி நிரூபித்து வருகின்றது என்றார்.

This government has agreed the funds assistance of chaina with some conditions. This opposition can bark loudly.
ReplyDelete