குசல் பெரேராவிற்கு 4 வருட போட்டித்தடை என்று, வெளிவந்த செய்திக்கு மறுப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பவீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று -11- வெளிவந்த செய்தியை ஐ.சி.சி மறுத்துள்ளது.
இந்த விடயத்தை ஐ.சி.சி நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஸாமி உல் உசன் பீ.பீ.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், குசலின் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment