Header Ads



தமிழகத்தில் அசத்துத்தீன் உவைஸி, எவனும் தலையை வெட்டவில்லை திரண்டுவந்த மக்கள் (படங்கள்)


அகில இந்திய அளவில் அரசியலை தூர்வாரிக்கொண்டிருக்கும் மஜ்லீஸ் கட்சியின் சார்பில் தமிழக 2016 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மஜ்லீஸ் கட்சியின் தேசிய தலைவர் அசத்துத்தீன் உவைஸி தலைமை தாங்கினார். நீண்ட காலமாக அசத்துத்தீன் உவைஸி தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதை மஜ்லீஸ் கட்சி தொண்டர்களை தாண்டி சமுதாய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவரது வருகை குறித்து திடீர் அறிவிப்பு வெளியானவுடன் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாணியம்பாடியில் குவிந்தனர். அசத்துத்தீன் உவைஸியின் மொழி புரிகிறதோ இல்லையோ அவருடைய உரையை கேட்க, அவரது முகத்தை பார்க்க வாணியம்பாடியில் வரலாறு காணாத அளவில் மக்கள் திரண்டு பேரெழுச்சியை ஏற்படுத்தி விட்டனர்.

2

சிங்கம் தமிழக மண்ணில் தான் இருக்கிறது, உவைஸியின் தலையை வெட்டுவேன் என்ற இந்து மகா சபா தலைவரை காணவில்லை !!

ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசமான அசத்துத்தீன் உவைஸியை பற்றி இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியின், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் மிகவும் கீழ்த்தரமாக பேசி வந்தனர்.

அதிலும் குறிப்பாக இந்து மகா சபா தலைவர் அசத்துத்தீன் உவைஸியின் தலையை வெட்ட வேண்டும் என்றார்.

அசத்துத்தீன் உவைஸி காலையிலிருந்து தமிழக மண்ணில் தான் இருக்கிறார்.
தலையை வெட்ட வேண்டுமென்ற பாலசுப்ரமணியனை காலையிலிருந்து காணவில்லை, அசத் என்றால் சிங்கம் என்று பொருள், தீன் என்றால் மார்க்கம் என்று பொருள். அசத்துத்தீன் என்றால் மார்க்கத்தின் சிங்கம் என்று பொருள்....



1 comment:

Powered by Blogger.