Header Ads



தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர், மின்னல் தாக்கியதில் பலி

மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குருவிட்ட - பட்டதொட்ட பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞன் குருவிட்ட பட்டதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கைத்தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி பலியாகியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.