நாங்கள் பாவிகள் - கொந்தளிக்கிறார் டிலான்
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் காலத்திற்கு காலம் தமது இலாபம் கருதி கூறும் கதைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அந்தளவுக்கு முக்கியமான கருத்துக்களாக கவனத்தில் எடுத்து கொள்ளக் கூடாது என பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தற்போது கூறுகிறார்.
ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எத்தனை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவ்வாறு எதிர்க்கட்சிகளின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார்?. எதிர்க்கட்சிகளின் மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ள எவருக்கும் இடமளிக்கவில்லை.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தம்பியான பசில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கான கண்காட்சி வானங்கள் அரச ஊழியர்களை கட்டாயம் அழைத்து வருமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் உத்தரவிட்டார்.
மகிந்த ராஜபக்ச தற்போது கூறுவது அவர் அதிகாரத்தில் இருக்கும் போது கூறியவற்றை அல்ல. மகிந்த ராஜபக்ச , விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் போல் அவர் தற்போது பேசி வருகிறார்.
ராஜபக்சவினர், பண்டாரநாயக்கவினர், ரணதுங்கவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உரிமையாளர்கள். அவர்கள் எதனையும் கூறலாம். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாவிகள் எமக்கு நினைத்தால் போல் எதுவும் செய்ய முடியாது.
இதனால், காலியில் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன் எனவும் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment