அதிக விடுமுறை வழங்கப்படுவதால், இலங்கைக்கு பாதிப்பா..?
இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் வழங்கப்படுவதனால் பொருளாதாரத்திற்சுகு பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் ஏற்கனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் வருடமொன்றுக்கு 25 தேசிய பொது விடுமுறைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏனைய ஆசிய நாடுகளை விடவும் இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் காணப்படுகின்றன.பௌத்த மக்களை செறிவாகக் கொண்ட இலங்கையில் பௌர்ணமி தினங்கள் அனைத்து பொது மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவி;க்கப்படுகின்றது.
இதனைத் தவிர, ஏனைய மதத்தவர்களின் முக்கிய திருநாட்களும் இலங்கையில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாகவும், இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பல்லின பல்மத சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கையில் சகவாழ்வினையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த இவ்வாறு பொது விடுமுறைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment