Header Ads



இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் - காலநிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

-உதயன் பத்திரிகை-

எதிர்வரும் நாட்களில் இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என காலநிலை தொடர்பான ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் இலங்கைத் தீவு முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை கடலூரில் கரை கடந்த காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பலர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

1 comment:

  1. Stupid news there was not any flood in kadalur last week

    ReplyDelete

Powered by Blogger.