அமைச்சர் தயாசிறியின் கோபம் சில்லறைத்தனமானது - அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் சில்லறைத்தனமான நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொல்கஹாவெல மேம்பாலம் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அங்குரார்ப்பண நிகழ்வின் போது நீலக் கொடிகளும் தாயசிறியின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இவ்வாறான கௌரவமான நிகழ்வு ஒன்றின் போது அமைச்சர் தயாசிறி சில்லறைத்தனமாக நடந்து கொண்டார்.மேம்பாலம் ஒன்று இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 120 தடவைகள் சுமார் 480 நிமிடங்கள் புகையிரத கடவையை மூட வேண்டியுள்ளது. வாகன நெரிசல் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர்.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் முக்கிய நிகழ்வில் சிறு சிறு விடயங்களை பெரிதுபடுத்தி தயாசிறி ஜயசேகர பிரபல்யம் அடைய நினைப்பது வருத்தமளிக்கின்றது.
பச்சைக் கொடியின் நிழலில் ஒருபோதும் இருக்கவில்லை என்பதனைப் போன்று அவர் நடந்து கொள்வது ஆச்சரியமளிக்கின்றது என்றார்.
இதேவேளை, குறித்த நிகழ்வின் போது அங்கு பச்சைக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் விளையாட்டுத்துறை அமைச்சர் கோபமடைந்ததோடு,அந்த நிகழ்வினை புறக்கணித்து வெளியேறியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறவனுக்கு நிறமெல்லாம் ஒரு பிரச்சினையில்லை. ஜனாதிபதி மைத்திரி கலந்து கொண்ட எத்தனையோ கூட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த என விழித்த போதெல்லாம் மைத்திரி சிரித்துக் கொண்டுதானே இருந்தார். கோபப்பட்டாரா? எழுந்து சென்றாரா? இல்லையே. அவர்தானப்பா அரசியல்வாதி.
ReplyDelete